அரசு ஊழியர்கள் சம்பளம் டூ இலவச லேப்டாப்.. தமிழக பட்ஜெட்டில்.. அசர வைக்கும் டாப் 10 அறிவிப்புகள்

 சென்னை: நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தமிழ்நாடு பட்ஜெட்டில் வெளியான டாப் 10 அறிவிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

                                                                                         


1. சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய நகரம் அமைக்கப்படும். இதில் ஐடி பார்க்குகள், பன்னடுக்கு கட்டிடங்கள், புதிய ஐடி நிறுவனங்கள், மெட்ரோ, உலக தர வசதி, புதிய நிறுவனங்கள், வெளிநாட்டில் இருப்பது போன்ற வசதிகளுடன் குளோபல் சிட்டி அமைக்கப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக தரமான வசதிகள் எல்லாம் இருக்கும் வகையில் இந்த சிட்டி அமைக்கப்பட உள்ளது.

2. பெண்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்தால் பதிவுக் கட்டணம் 1% குறைவு. ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகளின் பத்திரப் பதிவுகளுக்கும் இது பொருந்தும். விடியல் பயணம் காரணமாக பேருந்து பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 60 வரை உயர்ந்துள்ளது. மாதம் 888 ரூபாயை பெண்கள் சேமிப்பதாக திட்டக்குழு அறிக்கை கூறுகிறது. 

3. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும். பணிபுரியும் பெண்களின் வசதிக்காக மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் கட்டப்படும். மாவட்டம்தோறும் இவ்வகை விடுதிகள் அமைக்கும் இலக்கை நோக்கி அரசு செல்கிறது.. மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படும். ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமைத் தொகை பெற்றிடாத மகளிருக்கு மீண்டும் உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். எல்லோருக்கும் பணம் கிடைக்கும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

4. தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 7 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற சிறப்பு வகுப்பு அமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 7 ஆயிரம் நிதி வழங்கப்படும். 10 மாதங்களுக்கு இந்த நிதி வழங்கப்படும். முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும். நேர்முக தேர்வில் வென்றவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

5. ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும். திருச்சியில் பொறியியல் தொழில் பூங்கா அமைக்கப்படும், அதோடு ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சூரில் விமான நிலையம் அமைப்பதற்கான வரைவு சாத்தியக்கூறு அறிக்கையை இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இரண்டு தளங்களை ஆய்வு செய்து சமர்ப்பித்துள்ளது. 

6. அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கைக்கணினி (அ) மடிக்கணினி வழங்கப்படும்.

 7. பெற்றோரை இழந்த 50,000 குழந்தைகளுக்கு ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும்.

8. சென்னையில் தாம்பரம் டூ கிண்டி வரை வேளச்சேரி வழியாக மெட்ரோ அமைக்கப்படும், அதேபோல் துறைமுகத்தில் இருந்து லைட் ஹவுஸ் வரை மெட்ரோ அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9744 கோடியும், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வடஇந்தியாவில் மண்டலங்களுக்கு இடையே அமைக்கப்பட்டு வரும் RRTS ரயில்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும். இதற்க்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார். 🔹சென்னை - திண்டிவனம் ரூட்டில் RRTS ரயில்கள் அமைக்கப்படும். 🔹சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் ரூட்டில் RRTS ரயில்கள் அமைக்கப்படும். 🔹கோயம்புத்தூர் - சேலம் ரூட்டில் RRTS ரயில்கள் அமைக்கப்படும். 

9. தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள புதிய சாலைகள் தொடர்பாக தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த சாலைகள் தொடர்பான அறிவிப்புகளை இங்கே பார்க்கலாம். சென்னை ஈசிஆரில் 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.இங்கே நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, நான்கு வழிச்சாலை அமைக்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான பணிகள் இந்த ஆண்டில் மேற்கொள்ளப்படும்,'' என, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் தெரிவித்தார். அதாவது சாலையில் திருவான்மியூர் மற்றும் உத்தண்டி இடையேயான 14.6 கி.மீ., தூரத்திற்கு இரண்டு அடுக்கக் பலாம் அமைக்கப்படும். பட்ஜெட்டில், கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2000 கி.மீ. சாலைப்பணிகள் ₹1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 கோடியில் உயர்மட்ட நான்கு வழிச்சாலை சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூரில் இருந்து ஊத்தண்டி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் சாத்தியக்கூறுகளை மாநில நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் மற்றும் உத்தண்டி இடையேயான 14.6 கி.மீ., தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இங்கே இரண்டு அடுக்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. முதல் பாலம் ஒரு வழி பாதையாக இருக்கும். அதற்கு மேலே உள்ள பாலம் எதிர் திசையில் ஒரு வழி பாதையாக செயல்படும். செங்கல்பட்டு மாவட்டம் கருங்குடியில் இருந்து திருக்கழுக்குன்றம் வழியாக மாமல்லபுரம் வரை 4 வழிச்சாலை அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் கோவை மேற்கு புறவழி சாலை, திருநெவேலி மேற்கு புறவழி சாலைகள் 1713 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.மதுரையில் ரிங் ரோடு அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.

10. சரண்டர் பணபலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பணியாளர்கள் தங்களின் ஈட்டிய விடுப்பில் வருடந்தோறும் 15 நாட்களை ஒப்பளிப்பு செய்து பணமாக மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மும்மொழிக் கொள்கை ஏற்க மறுப்பால் ரூ.2152 கோடி தராத மத்திய அரசை கண்டிக்கிறோம். ஆனால் அதற்காக அவர்களின் 3 மொழிக்கொள்கையை ஏற்க முடியாது. மும்மொழிக்கொள்கையை ஏற்காததால் ஒன்றிய அரசு ரூ.2150 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்கவில்லை. மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து இதற்காக நிதியை விடுவித்துள்ளது. இருமொழிக் கொள்கையை விட்டுத்தரமாட்டோம் என உறுதியாக உள்ள முதல்வரின் பக்கம் நின்று மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். அவர்கள் பணம் தரவில்லை என்றாலும் ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம். இதனால் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்குவோம். மத்திய அரசு கொடுக்காத நிதியை மாநில அரசே கொடுக்கும். 2000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்வுக்கு ரூ. 160 கோடி ஒதுக்கீடு செய்கிறோம்., என்று கூறி உள்ளார்.




Post a Comment

0 Comments