தமிழக மக்களுக்கு ஊடகங்களின் மூலம் ஒரு உறுதியை தருகிறேன்! திமுக.மு.க.ஸ்டாலின்

 கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு பல்வேறு துரோகங்களை செய்தது இந்த அதிமுக அரசு.கொரானா காலத்தில் தமிழக மக்களை அதிமுக அரசு கைவிட்டு விட்டது. ஆட்சியில் இல்லையெனினும் மக்களுக்கு 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் உதவிகள் செய்தது திமுக.மு.க.ஸ்டாலின் ஆகிய நான் தமிழக மக்களுக்கு ஊடகங்களின் மூலம் ஒரு உறுதியை தருகிறேன். "உங்கள் பிரச்சினையே தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்களில் உங்கள் பிரச்சினையை தீர்ப்பதே வேலை".உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பயணத்திட்டத்தின் மூலம் 30 நாட்களில் தமிழகத்தின் 234 தொகுதி மக்களையும் சந்திக்கிறேன். அங்குள்ள பிரச்சினைகள் குறித்து மக்கள் எனக்கு கோரிக்கை மனுக்களை தரலாம்.வரும் 29-ஆம் தேதி திருவண்ணாமலையில் பிரச்சாரத்தை தொடங்குகிறேன் - மு.க.ஸ்டாலின்.

உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு, நான் மட்டுமே பொறுப்பு.மக்களின் கோரிக்கைகளை தீர்க்க எனது நேரடிக் கட்டுப்பாட்டில் தனித்துறை உருவாக்கப்படும் - மு.க.ஸ்டாலின். 


www.stalinani.com என்ற இணையதளம் வழியாகவும் மக்கள் தங்களது கோரிக்கைகளை பதிவு செய்யலாம் - மு.க.ஸ்டாலின்.கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு செய்ய தவறியதை திமுக செய்யும்.


Post a Comment

0 Comments