மாத சம்பளக்காரர்களுக்கு வரி பலகை எண்ணிக்கை குறைக்க அதிக வாய்ப்பு..!

 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்ய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் மிடில் கிளாஸ் மக்களுக்காக ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியாக உள்ளது.





மாத சம்பளக்காரர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பலன் அளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் அறிக்கையில் வருமான வரி பலகையை அதாவது Tax Slab-ஐ மறுசீரமைப்புச் செய்து வரிப் பலகை எண்ணிக்கையைக் குறைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

தொழிற்துறை அமைப்பான அசோசாம் தனிநபர் வருமான வரியில் எளிமையான வரி அமைப்பு வேண்டும் என்றும், 2021-22ஆம் நிதியாண்டில் வருமான வரிப் பலகை எண்ணிக்கையைக் குறைத்து எளிதான வரி பிரிவை உருவாக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சகத்திடமும், பட்ஜெட் அறிக்கையைத் தயார் செய்யும் குழுவிடமும் பரிந்துரை செய்துள்ளது.புதிய வருமான வரி அமைப்பில் கிட்டத்தட்ட 7 வரிப் பலகை உள்ளது, இதன் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு எளிய வரி நடைமுறையாக மாற்றி அனைத்துத் தரப்பு மக்களும் எளிதாகப் பயன்படுத்தும் படி மாற்றி அமைக்க வேண்டும் என அசோசாம் எனப்படும் Associated Chambers of Commerce and Industry of India அமைப்பு தெரிவித்துள்ளது.


பழைய வரி அமைப்பில் 0%, 5%, 20%, 30% என 4 வரிப் பிரிவுகள் மட்டுமே இருந்தது, ஆனால் புதிய வரி அமைப்பில் 0%, 5%, 10%, 15%, 20%, 25%, 30% என 7 பிரிவுகளில் வருமான வரி அளவீடுகள் பிரிக்கப்பட்டு உள்ளது. இரண்டு வரி அமைப்பிலும் 30 சதவீத வரி விதிப்பு 15 லட்சத்திற்கும் அதிகமான வருமான உடையவர்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டு உள்ளது.


வரி பலகையைக் குறைக்கப்படுவதன் வாயிலாக மில்டிகிளாஸ் மக்கள் பெரும் வருமானத்திற்கான வருமான வரி பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 5 சதவீத வரி குறைய வாய்ப்புகள் உள்ளது.


Post a Comment

0 Comments