முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் ₹50000 நிதி உதவி-2020 | CM Girl Child Protection Scheme - Social Welfare Department

 CM Girl Child Protection Scheme - Social Welfare Department


பெண் கல்வியை மேம்படுத்துதல், பெண் சிசுக் கொலையை ஒழித்தல், ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்கினைத் தடுத்தல், 
சிறு குடும்பமுறையை ஊக்குவித்தல், ஏழைக் குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளித்தல் மற்றும் சமுதாயத்தில் பெண் குழந்தைகளின் நிலையை உயர்த்துதல்.வழங்கப்படும் உதவி 
2002 முதல் நாளது வரை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் மூலமும் கீழ்கண்டவாறு வைப்புத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
திட்டம் 1
இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது பிறகோ பிறந்து, குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை மட்டும் இருப்பின் அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையான ரூ.50,000/- தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது பெண் குழந்தையின் பெயரில் வழங்கப்படுகிறது.
A- 1 பெண் குழந்தை 01.08.2011 க்கு முன்பு பிறந்த குழந்தை எனில் ரூ.25,000/-
B- 1 பெண் குழந்தை 01.08.2011 க்கு பின்பு பிறந்த குழந்தை எனில் ரூ.50,000/-
மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டிலும் புதுப்பிக்கப்பட்டு, 18 வயது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடனும், கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.
திட்டம் 2
இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்து, குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தையின்பேரிலும் நிலையான வைப்புத் தொகையாக தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது நகல், பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படும்.
மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடன், கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய நிலை வைப்புத் தொகையின் முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.
01.08.2011 க்கு பின்பு பிறந்த குழந்தைகள் எனில் தலா ரூ. 25,000/-
திட்டம் 3
இத்திட்டத்தின் கீழ் முதல் பிரசவத்தில் 1 பெண்குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் 2 பெண் குழந்தைகளும் பிறந்தால், தலா 1 குழந்தைக்கு ரூ. 25,000/- வீதம் தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது நகல், பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படும்.
மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடன்,கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய நிலை வைப்புத் தொகையின் முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.
 01.08.2011 க்கு பின்பு பிறந்த குழந்தைகள் எனில் தலா ரூ.25,000/-
திட்டத்தின் நோக்கம்
அனைத்து பெண் குழந்தைகளுக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி (10ம் வகுப்புவரையிலான கல்வியைப் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் இத்திட்டம் அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேவைப்படும் சான்றுகள்

1- தாய் தந்தையரின் வயதுச் சான்று (பள்ளி மாற்றுச் சான்று)

2-பெண் குழந்தைகளின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்று

3-குடும்ப நல அறுவைசிகிச்சை சான்று (தாய் அல்லது தந்தை)

4-10ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருந்து வருவதற்கான சான்று (வட்டாட்சயர்)

5-ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று (வட்டாட்சயர்)

6-குடும்ப வருமான சான்று (வட்டாட்சயர்)

7-ஆண் குழந்தை தத்து எடுக்க மாட்டேன் என்பதற்கான சான்று (பெற்றோர்)

8-குடும்ப புகைப்படம்

9-குடும்ப அட்டை நகல்

10-ஆதார் நகல்

விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு

முதலமைச்சரின் பெண் குழந்தை திட்டத்தின்கீழ் பயன்பெற்ற குடும்பங்களின் பெண் குழந்தைகளில் எதிர்பாராத விதமாக பயனாளி இறந்துவிட்டால் அந்த பயனாளிக்கு உரிய வைப்புத் தொகையினை அக்குடும்பத்திலுள்ள மற்றொரு பயனாளிக்கு அளிக்கப்படும்.

 முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் கலந்திருக்க வேண்டும். அவ்வாறு பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வு எழுதிய மதிப்பெண் பட்டியலுடன் 18 வயது பூர்த்தியடைந்தவுடன் பயனாளிக்குரிய வைப்புத் தொகைக்கான முதிர்வுத் தொகை வழங்கப்படும்

விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் சான்றுகள். மாவட்ட சமூகநல அலுவலரால் சரிபார்க்கப்பட்டு, சரியான விண்ணப்பங்கள் பட்டியலிடப்பட்டு, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments