ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் (ICDS) திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான நேரடி நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பதவிகள் :
1.அங்கன்வாடி பணியாளர்
2.குறு அங்கன்வாடி பணியாளர்
3.அங்கன்வாடி உதவியாளர்
காலிப்பணியிடங்கள் :
7783 பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி :
1.அங்கன்வாடி பணியாளர் - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.குறு அங்கன்வாடி பணியாளர் - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.அங்கன்வாடி உதவியாளர் - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் :
1.அங்கன்வாடி பணியாளர் - ரூ. 7700 - ரூ. 7700 - 24200
2.குறு அங்கன்வாடி பணியாளர் - ரூ. 5700/- ரூ. 5700 - 18000
3.அங்கன்வாடி உதவியாளர் - ரூ. 4100- ரூ. 4100 - 12500
தேர்வு செய்யும் முறை:
1.Interview
இருப்பிடச் சான்று:
காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள கிராமத்திலுள்ள குழந்தைகள் மையத்திற்கு விண்ணப்பிப்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்தவராகவோ, அந்த கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பிற கிராமத்தைச் சேர்ந்தவராகவோ அல்லது அந்த கிராம ஊராட்சி எல்லையின் அருகிலுள்ள அடுத்த கிராம ஊராட்சியைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, நகர பஞ்சாயத்துகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர் அதே வார்டு அல்லது அருகிலுள்ள வார்டு அல்லது மையம் அமைந்துள்ள வார்டின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் வார்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : |
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைக்க வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்கள் (தாய் / தந்தை இறப்புச் சான்று) மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களையும் இணைக்க வேண்டும். மேலும் நேர்காணலின்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் தவறாமல் கொண்டு வர வேண்டும்
ANGANWADI WORKER APPLICATION-
MINI ANGANWADI WORKER APPLICATION-
ANGANWADI HELPER APPLICATION -
ALL TALUK ADDRESS - CLICK HERE
WEBSITE - CLICK HERE
0 Comments