ரூ.20,000 ஊதியத்தில் Madras University வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!
University Of Madras எனும் சென்னை பல்கலைக்கழகமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Guest Lecturer, Teaching & Research Fellow பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
University of Madras காலிப்பணியிடங்கள்:
சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Guest Lecturer பணிக்கு 4 பணியிடம் மற்றும் Teaching and Research Fellow பணிக்கு 3 பணியிடம் என மொத்தமாக 07 காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்ப உள்ளது.
University of Madras கல்வித் தகுதி:
Guest Lecturer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் Geology / Applied Geology / Geophysics / Remote Sensing பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Teaching and Research Fellow பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் Applied Geology பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
University of Madras அனுபவ விவரம்:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் தேவையான அளவிற்கு முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
University of Madras ஊதிய விவரம்:
Guest Lecturer பணிக்கு என்று தேர்வாகும் தேர்வர்கள் மாதம் ரூ.20,000/- ஊதிய தொகையாக பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
Teaching and Research Fellow பணிக்கு என்று தேர்வாகும் தேர்வர்கள் மாதம் ரூ.15,000/- ஊதிய தொகையாக பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
University of Madras தேர்வு முறை:
இப்பணிக்கு தகுதி வாய்ந்த பணியாளர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
University of Madras விண்ணப்பிக்கும் முறை:
இந்த பல்கலைக்கழக பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து அறிவிப்பில கொடுத்துள்ள தபால் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 11.07.2022 ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
0 Comments