10 ஆம் வகுப்பு தோல்வியுற்றவரா? – ரூ.52400/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு !
தஞ்சாவூர் மாவட்ட நிலஅளவை பதிவேடுகள் துறை பதிவுரு எழுத்தர் காலியிடப் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே தகுதியானவர்கள் 15.07.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவித்தப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
தஞ்சாவூர் மாவட்ட நிலஅளவை பதிவேடுகள் துறையில் காலியாகவுள்ள 01 – பதிவுரு எழுத்தர் பணியிட காலியிடத்திற்கு பொது பிரிவினருக்கானது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு:
வயது வரம்பு (குறைந்தபட்ச வயது 18 ஆகும். அதிகபட்ச வயது வரம்பு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (அருந்ததியினர்) தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி வகுப்பினர் – 37 வயது, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 34 வயது, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம் வகுப்பினருக்கு) – 34 வயது மற்றும் பொது பிரிவினர் – 32 வயது ஆகும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10-ஆம் வகுப்பு தோர்ச்சி/தோல்வியுற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விகிதம்:
பதிவுரு எழுத்தர் – ரூ. 16600-52400/-
விண்ணப்பிக்கும் முறை:
https:/thanjavur.nic.in என்ற இணைய முகவரிக்கு சென்று, அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, 15.07.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் உதவி இயக்குநரா, நிலஅளவை பதிவேடுகள் துறை, அறை எண்:318, மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர். அஞ்சல் குறியீட்டு எண்:613010 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
0 Comments