தமிழக அரசில் Data Entry Operator வேலைவாய்ப்பு – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

 

தமிழக அரசில் Data Entry Operator வேலைவாய்ப்பு – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

தமிழ்நாடு அரசு, சமூகப்‌ பாதுகாப்புத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ காஞ்சிபுரம்‌ மாவட்ட இளைஞர்‌ நீதிக்‌ குழுமத்தில்‌ (Juvenile Justice Board) காலியாகவுள்ள உதவியாளருடன்‌ கலந்த கணினி இயக்குபவர்‌ (Asst. cum Data Entry Operator) பணியிடத்தை முற்றிலும்‌ தற்காலிகமாக ஓராண்டுகால ஒப்பந்தத்தின்‌ பேரில்‌ புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியானவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:

Asst. cum Data Entry Operator பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்புபவர்கள்‌ குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. மேலும்‌, தட்டச்சு, கணினி தொழில்‌ நுட்ப சான்றிதழ்‌ மற்றும்‌ கணினி இயக்குவதில்‌ முன்‌ அனுபவம்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.

சம்பளம்:

தொகுப்பூதிய அடிப்படையில்‌ மாதம்‌ ரூ. 9,000/- (ரூபாய்‌ ஒன்பதாயிரம்‌) சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதிகளை பெற்று விளர்ணப்பிக்க விருப்பம்‌ உள்ளவர்கள்‌ காஞ்சிபுரம்‌ மாவட்ட இணையதள (s (https://kancheepuram.nic.in/) முகவரியில்‌ பதிவிறக்கம்‌ செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன்‌, அதில்‌ குறிப்பிட்டுள்ள விவரங்கள்‌ சம்பந்தமான அனைத்து சான்றிதழ்களின்‌ நகல்களையும்‌ இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு வருகிற 15-07-2022-ஆம்‌ தேதி மாலை 5.30 மணிக்குள்‌ நேரிலோ அல்லது தபால்‌ மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌, மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு, என்‌: 317, காமாட்சி நிலையம்‌, 1.7.5. மணி தெரு, மாமல்லன்‌ நகர்‌, (மாமல்லன்‌ மெட்ரிக்‌ மே.நி. பள்ளி அருகில்‌), காஞ்சிபுரம்‌ – 631502.

NOTIFICATION

Post a Comment

0 Comments