SABARIMALA ONLINE TICKET BOOKING IN TAMIL | HOW TO BOOK SABARIMALA ONLINE TICKET

 

சபரிமலை ஐயப்பன் கோவில் விரைவு தரிசனத்திற்கு ஆன்-லைனில் டிக்கெட் புக் செய்வது எப்படி?


ஐயப்ப பக்தர்கள் கூட்ட நெரிசலை குறைக்க விரைவு தரிசனத்திற்கான ஆன்-லைன் புக்கிங் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆன்-லைனில் டிக்கெட் புக் செய்து வருபவர்கள் விரைவு தரிசனத்திற்கான பாதையில் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு எந்த வித கட்டணமும் கிடையாது. ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தால் மட்டும் போதுமானது.

ஆன்-லைனில் டிக்கெட் புக் செய்வது எப்படி?


https://sabarimalaonline.org என்ற இணையதள லிங்கில் செல்லவும்.

உங்கள் பெயர், மொபைல் நம்பர், இ-மெயில் முகவரி, புகைப்படம், அடையாள அட்டை போன்றவற்றை இணையதளத்தில் முதலில் Register செய்து கொள்ளவும்.

உங்கள் மொபைல் அல்லது இ-மெயில் முகவரி மற்றும் கடவுச் சொல்லை (password) பயன்படுத்தி Login செய்து கொள்ளவும். Login செய்யாமல் டிக்கெட் புக் செய்ய முடியாது.பின் Virtual-q என்ற tap-ஐ க்ளிக் செய்து உள் நுழைய வேண்டும். பின் அங்கிருக்கும் தேதியை க்ளிக் செய்து பக்தர்கள் தரிசனத்துக்கான ஆன்லைன் டிக்கெட்டை புக் செய்யலாம்.

பக்தர்கள் தங்களுக்கு தேவையான தேதியை கிளிக் செய்த பின் அந்த நாளில் எந்த நேரம் என்பதை காட்டும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி பக்தர்கள் தங்களுக்கு தேவைக்கேற்ப நேரத்தை தேர்ந்தெடுக்க முடியும்.

அந்த நாளுக்கு ஆன்-லைனில் டிக்கெட் இருந்தால் உங்களுக்கு பச்சை நிறத்தில் காட்டும். டிக்கெட் முடிந்து விட்டால் சிகப்பு நிறத்தில் காட்டும். அதற்கேற்ப உங்கள் பயணதிட்டத்தை தேர்வு செய்யவும்.

பின் பக்தர்களின் முழு விவரம் அவர்களது புகைப்படம், அடையாள அட்டை  போன்ற விவரங்களை பதிவிட்டு டிக்கெட்டை பெறலாம். ஒரு Login மூலம் எத்தனை டிக்கெட் வேண்டுமென்றாலும் புக் செய்து கொள்ள முடியும்.

டிக்கெட்டை நகல் எடுத்து கொள்ளலாம் அல்லது உங்கள் ஸ்மார்ட் போனில் டிக்கெட்டின் பார்கோடு இருந்தால் போதும் அதனை ஸ்கேன் செய்து கொள்வார்கள்.

ஆன்-லைன் மூலமாக பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை பம்பையில் உள்ள போலீசார் சரிபார்த்து அதற்கான டோக்கனை வழங்குவார்கள்.

Post a Comment

0 Comments