மத்திய அரசின் 'பிரதமர் உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழ், ஏழை மற்றும் நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு இலவசமாக எல்.பி.ஜி.
இணைப்பு வழங்கும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, தற்போது கூடுதலாக 25 லட்சம் புதிய இலவச காஸ் இணைப்புகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய நடவடிக்கையில், நகரமயமாக்கல் அதிகரித்து உள்ள மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிற்கு, குறைந்தது 10% என்றால் சுமார் 2.5 லட்சம் இணைப்புகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய கணக்குப்படி, தமிழகத்தில் ஏற்கனவே 40 லட்சம் பெண்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டம் எளிய மக்களுக்கு சமையல்கருவி பாதுகாப்பு மற்றும் வசதியை அதிகரிப்பதோடு, பெண்களின் சுகாதாரத்தையும் மேம்படுத்தும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
0 Comments