அங்கன்வாடியில் வேலை! 12ம் வகுப்பு படித்து இருந்தால் போதும்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

Follow Us

அங்கன்வாடியில் வேலை! 12ம் வகுப்பு படித்து இருந்தால் போதும்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

 புதுச்சேரி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 618 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு, தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் மற்றும் சம்பள விவரம் போன்றவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.


காலிப்பணியிடங்கள் மற்றும் சம்பள விவரம்


அங்கன்வாடி வேலை தொடர்பாக மொத்தம் 618 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 344 அங்கன்வாடி பணியாளர் வேலைக்கும், 274 அங்கன்வாடி உதவியாளர் வேலைக்கும் காலியிடங்கள் உள்ளது. அங்கன்வாடி பணியாளருக்கு மாதம் ரூ.6000 சம்பளமும், அங்கன்வாடி உதவியாளர் வேலைக்கு மாதம் ரூ.4000 சம்பளமும் வழங்கப்படும்.

தகுதிகள் மற்றும் வயது வரம்பு


அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் ஆகிய இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பெண்களாக மட்டுமே இருக்க வேண்டும். மேலும் புதுச்சேரியை சேர்ந்தவராகவும், விண்ணப்பிக்கும் அங்கன்வாடி மையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிற்குள் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். இதற்கான இருப்பிட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். ஆகஸ்ட் 31, 2025 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சம் 35 வயதும் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை


இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் எதுவும் கிடையாது. விண்ணப்பதாரர்களின் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். திட்டத்தின் தலைவர், செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களை கொண்ட தேர்வுக் குழு, தகுதியானவர்களின் பட்டியலை வெளியிடும். அங்கன்வாடி மையத்திற்கு அருகில் வசிப்பவர்களுக்கும், அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பெண்கள், அக்டோபர் 31 மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். நேரடியாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. புதுச்சேரியை சேர்ந்த தகுதியுள்ள பெண்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, அரசு பணியில் சேரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.


விண்ணப்ப செயல்முறை


1. https://wcd.py.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

2. அங்குள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Google Form இணைப்பு மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

3. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

4. விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் கிடையாது.

Post a Comment

0 Comments