தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநகம், வட்டார ஒருங்கிணைப்பாளர், சிறப்பு கல்வியியலாளர், பல்நோக்கு பணியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 1096 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது என்று அறிவித்துள்ளது.
திட்டத்தின் பின்னணி: மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்கவும்,
அவர்களுக்கு தடையற்ற சூழல் ஏற்படுத்தவும், சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும், உலக வங்கியின் நிதி உதவியுடன் "உரிமைகள் திட்டம்" கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டது.
6 ஆண்டுகளுக்கான திட்டம், ரூ.1773.87 கோடி நிதியுடன் செயல்படுத்தப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் தங்களது மறுவாழ்வு சேவைகள், நலத்திட்டங்கள் ஆகியவற்றை தங்கள் இருப்பிடம் அருகே பெறுவதற்கான வாய்ப்புகளை உறுதி செய்கிறது.
பணியிட விவரம்:
பிளாக் ஒருங்கிணைப்பாளர் – 250
மறுவாழ்வு மற்றும் வழக்கு மேலாளர் – 94
உளவியலாளர் / ஆலோசகர் – 94
சிறப்புக் கல்வியாளர் – 94
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் – 94
கண் மருத்துவர்/ Mobility பயிற்றுவிப்பாளர் – 94
ஜூனியர் நிர்வாக ஆதரவாளர் – 94
பல்நோக்கு பணியாளர் (தூய்மை மற்றும் பாதுகாப்பு) – 188
அலுவலக உதவியாளர் (SDC) – 94
சம்பள விவரம்:
பிளாக் ஒருங்கிணைப்பாளர் பதவி – ரூ.30,000
மறுவாழ்வு மற்றும் வழக்கு மேலாளர் பதவி – ரூ.35,000
உளவியலாளர் / ஆலோசகர் பதவி – ரூ.35,000
சிறப்புக் கல்வியாளர் பதவி – ரூ.35,000
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் பதவி – ரூ. 35,000
கண் மருத்துவர்/ Mobility பயிற்றுவிப்பாளர் பதவி – ரூ.35,000
ஜூனியர் நிர்வாக ஆதரவாளர் பதவி – ரூ15,000
பல்நோக்கு பணியாளர் பதவி – ரூ.12,000
அலுவலக உதவியாளர் பதவி – ரூ.12,000
ஒவ்வொரு பதவிக்குமான காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இணையதள அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரங்களை https://www.scd.tn.gov.in/ என்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணையதளம் வழியாகவும் பெறலாம். விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
எப்படி விண்ணப்பிப்பது? இதற்கான விண்ணப்பங்களை tnrightsjobs.tnmhr.com இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 14-10-2025 ஆகும்
0 Comments