ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
பதவி: மார்க்கெட்டிங் அசோசியேட்
காலியிடங்கள்: 10
ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.15,000 ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது.
கல்வி தகுதி: ஏதேனும் கீழ் பட்டப்படிப்பு (அதாவது 10+2+3 ஸ்ட்ரீம்) அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் https://www.repcobank.com/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை ஒரு முறை தெளிவாக வாசித்துவிட்டு, அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவண நகல்களை சுய சான்றொப்பமிட்டு, இணைத்து, கீழ்காணும் முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager (Admin),
Repco Bank Ltd, PBNo.1449,
Repco Tower, No:33,
North Usman Road,
T.Nagar,
Chennai - 600 017.
விண்ணப்ப கட்டணம்: ஏதுமில்லை
தேர்வு செய்யும் முறை:
தகுதி பட்டியல் வெளியீடு,
நேர்காணல் போன்ற நிலைகள் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.07.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.08.2025
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
0 Comments