கிருஷ்ணகிரி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்! யாரெல்லாம் சேரலாம் தெரியுமா?

Follow Us

கிருஷ்ணகிரி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்! யாரெல்லாம் சேரலாம் தெரியுமா?

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், ஓசூர் காம்ராஜ் நகர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஒசூர் தொழிலாளர் நடமாடும் மருத்துவ குழுவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புக்குவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.

மருந்தாளுநர் (Pharmacist)

காலியிடங்கள் : 2

கல்வித் தகுதி : D.Pharm/B.Pharm முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.15000 ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது

வயது வரம்பு :

OC -18 வயது முதல் 32 வயதிற்குட்பட்டவர்கள்

BC, MBC 18 முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள்

SC, ST - 18 வயது முதல் 37 வயதிற்குட்பட்டவர்கள்

ஆய்வக நுட்புநர் (Lab Technician)

காலியிடங்கள் : 3

கல்வித் தகுதி : DMLT தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.13000 ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது

வயது வரம்பு : இந்த பணிக்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 59 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆய்வக நுட்புநர் நிலை-2 (Lab Technician - grade 2)

காலியிடங்கள் : 9

கல்வித் தகுதி : DMLT தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.15000/- ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது

வயது வரம்பு : இந்த பணிக்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 59 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

செவிலியர் (Staff Nurse)

காலியிடங்கள் : 7

கல்வித் தகுதி : Dip/GNM/B.Sc Nursing முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.18000/- ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது

வயது வரம்பு :

OC -18 வயது முதல் 32 வயதிற்குட்பட்டவர்கள்

BC, MBC 18 முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள்

SC, ST - 18 வயது முதல் 37 வயதிற்குட்பட்டவர்கள்

சுகாதார ஆய்வாளர் நிலை 2 (Health Inspector (GR-II) )

காலியிடங்கள் : 7

கல்வித் தகுதி : 12th pass/MPHW (M) course முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.14000 ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது

வயது வரம்பு :

OC -18 வயது முதல் 32 வயதிற்குட்பட்டவர்கள்

BC, MBC 18 முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள்

SC, ST - 18 வயது முதல் 37 வயதிற்குட்பட்டவர்கள்

பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்(Multi Purpose Hospital Worker)

காலியிடங்கள் : 4

கல்வித் தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.8500 ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது

வயது வரம்பு : இந்த பணிக்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 45 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பழங்குடியினர் கவுன்சிலர் (Tribal Counsellors)

காலியிடங்கள் : 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து இளங்கலை/சமூகவியல்/உளவியல்/சமூக சேவகர்/பி.எஸ்சி நர்சிங்/பட்டப்படிப்பு.

ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.18000 ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது

வயது வரம்பு : இந்த பணிக்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 45 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஓட்டுநர்(Driver)

காலியிடங்கள் : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி & கனரக ஓட்டுநர் உரிமம் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.15000 ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது

வயது வரம்பு : இந்த பணிக்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 45 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வாகன துலக்குநர்(Cleaner)

காலியிடங்கள் : 1

கல்வித் தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.8500 ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது

வயது வரம்பு : இந்த பணிக்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 45 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிபந்தனைகள்:

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under taking) மற்றும் 11 மாதத்திற்கான ஒப்பந்த கடிதம் அளிக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் https://krishnagiri.nic.in/notice_category/recruitment/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை ஒரு முறை தெளிவாக வாசித்துவிட்டு, அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து,நேரிலோ, விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் நிலை- 2 பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், மாவட்ட பழங்குடியினர் கவுன்சிலர் மற்றும் ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பித்துடன் கீழ்கண்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்கள் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். மேலும் கீழ்கண்ட சான்றிதழ்களின் நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அனுப்ப வேண்டிய நகல்கள்:

1. 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

2. 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

3. பட்ட/பட்டய படிப்பிற்கான சான்றிதழ் மற்றும் பதிவு செய்த சான்றிதழ்.

4. சாதிச் சான்றிதழ்

5. முன்னுரிமை சிறப்பு சான்றிதழ்கள் (ஏதுமிருப்பின்)

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-

மாவட்ட சுகாதார அலுவலர், அலுவலகம்,

மாவட்ட ஆட்சியரகம் பின்புறம்,

வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில்,

இராமபுரம் அஞ்சல்,

கிருஷ்ணகிரி மாவட்டம் 635 115.

முக்கிய தேதிகள்:

விண்ணப்ப தொடக்க நாள்: 12/07/2025

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23/07/2025

மேற்காணும் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும்போது கீழ்காணும் ஆவணங்களை தவறாமல் இணைக்க வேண்டும்.

1. விண்ணப்பம்

2. விண்ணப்பத்தில், விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஓட்டப்பட்டிருக்க வேண்டும். முழுமையான முகவரி மற்றும் அலைபேசி எண் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

3. முன்னுரிமைக்கான சான்றின் நகல் சுய சான்றொப்பமிட்டு

4. கல்வித் தகுதிக்கான சான்றின் நகல் - சுய சான்றொப்பமிட்டு

5. சாதிச் சான்றின் நகல் சுய சான்றொப்பமிட்டு

6. இருப்பிடச் சான்றின் நகல் (குடும்ப அட்டை/ஆதார் அட்டை) சுய சான்றொப்பமிட்டு

மேலும், மேற்குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் மற்றும் சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments