என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்- Trained Graduate Teacher
காலியிடங்கள்: 04கல்வி தகுதி:(i) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து பி.ஏ/பி.எஸ்சி., பட்டம் வழக்கமான பாடமாகப் படித்து, தொடர்புடைய பாடத்தில் (இயற்பியல் மற்றும் வேதியியல்), இந்தி ஆகியவற்றில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தகுதி பெற்றிருக்க வேண்டும்.(ii) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தொடர்புடைய பாடத்தில் வழக்கமான படிப்பாக பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Peon cum Day Watchman
காலியிடங்கள்: 01கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.விண்ணப்ப கட்டணம்: ஏதுமில்லை தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வுநேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த பதவிகளுக்கான விண்ணப்பப் படிவத்தை https://ncscoimbatore.nesnavy.in/ என்ற அதிகாரபூர்வ இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்து , முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஸ்கேன் செய்து, recruitmentncscbe16@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 05 ஜூன் 2025 அன்று மாலை 6 மணிக்குள் அனுப்ப வேண்டும்.முக்கிய தேதிகள்:விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.05.2025விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.06.2025
0 Comments