மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கியான யூனியன் வங்கியில் (Union Bank of India) காலியாக உள்ள 500 உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
சம்பள விவரம் : உதவி மேலாளர் பணியில் சேர விரும்பும் நபர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் 85,920/- வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது. வயதுவரம்பு: இப்ப பணியிடத்திற்கு 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: உதவி மேலாளர் (கடன்) பணியிடத்திற்கு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனம்/அரசு ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் CA/ CMA(ICWA)/ CS ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட/ அரசு ஒழுங்குமுறை அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனம்/நிதியியல் நிபுணத்துவத்துடன் முழுநேர வழக்கமான MBA/ MMS/ PGDM/ PGDBM துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவி மேலாளர் (IT) பணியிடத்திற்கு இந்திய அரசு/அரசு அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து கணினி அறிவியல் பொறியியல்/ ஐடி/ மின்னணுவியல்/ மின்னணுவியல் & கணினி அறிவியல்/ மின்னணுவியல் & தொலைத்தொடர்பு/ தரவு அறிவியல்/ இயந்திர கற்றல் & AI/ சைபர் பாதுகாப்பு ஆகியவற்றில் முழுநேர BE/ B.Tech/ MCA/ MSc (IT)/ MS/ M.Tech/ 5 வருட ஒருங்கிணைந்த MTech பட்டம். முடித்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: இப்பணியிடத்திற்கான விண்ணப்ப கட்டணமாக எஸ்டி/ எஸ்சி/ முன்னாள் ராணுவத்தினர்/ மாற்றுத்திறனாளிகள் - ரூ.177/-மற்றவர்களுக்கு - ரூ.1180/- கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.unionbankofindia.co.in என்ற வங்கியின் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் 20.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments