இன்றைய யுகத்தில் ஒருவரின் அடையாளமாக, பிறப்பு சான்றிதழ் மிகவும் முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. கல்வி, அரசு உதவிகள், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் என அனைத்திற்கும் பிறப்பு சான்றிதழ் அவசியமாகி விட்டது.
அதனால், குழந்தை பிறந்தவுடன் 21 நாட்களுக்குள் பிறப்பு பதிவு செய்தல் அவசியம். இது இலவசமாக அரசு வழங்கும் சேவையாகும்.
2000க்கு முன்பு
2000க்கு முன்பு பிறந்தவர்கள் பலர், பிறப்பை பதிவு செய்யாமலும், பிறப்பு சான்றிதழ் இல்லாமலும் வாழ்ந்துள்ளனர். இப்போது வரை வாங்காத ஆட்களும் அதிகம். இன்று அவர்கள் சான்றிதழ் தேவைப்படும் நேரத்தில் தடைகளை சந்திக்கிறார்கள். இப்படி முதலில் பிறப்பு சான்றிதழ் வாங்காதவர்கள், தற்போது இந்த சான்றிதழை பெற வேண்டும் என்றால் அந்த முறை சிக்கலானது. மற்றும் நீண்ட நாட்கள் எடுக்கும். ஆனால், எப்படி பெறுவது என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்கள் என்ன செய்யலாம்?1. கோட்டாட்சியரிடம் நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.2. விஏஓ மூலம் விசாரணை நடக்கும்.3. அதன்பிறகு மட்டுமே பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும்.முன்பு நீதிமன்றம் மூலமாகவே இதைச் செய்திருந்தனர். இப்போது இது நிர்வாக முறையில் மாறியுள்ளது. இதேபோல் இறப்பு சான்றிதழுக்கும் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.இப்படி பெரும் சான்றிதழ்கள் அல்லது பழைய சான்றிதழை தொலைத்துவிட்டீர்கள் என்றால் அதை மீண்டும் பெற மீண்டும் விண்ணப்பிக்க வேண்டுமா என்று கேட்டல் அது தான் இல்லை. தொலைத்த சான்றிதழின் நகலை எளிதாக ஆன்லைனில் பெறுவதற்கான வாய்ப்பு தற்போது வந்துள்ளது. இது குறித்த விபரங்களை தான் இந்த செய்தித் தொகுப்பில் சொல்ல இருக்கிறோம்.
ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ் எளிதாக டவுன்லோடு செய்யும் முறை:
1. சென்னை மாநகராட்சிக்கான இணையதளம்:நீங்கள் சென்னை மாநகராட்சியில் வாழும் நபராக இருந்து உங்கள் பிறப்பு சான்றிதழ் தொலைந்து இருந்தால், கவலையை விடுங்கள். https://chennaicorporation.gov.in/Tamil/online-civic-services/birthCertificate.do?do=show என்ற இணையதளம் மூலம் உங்கள் பிறப்பு சான்றிதழை டவுன்லோட் செய்துகொள்ளலாம். தேவைப்படும் விவரங்கள்:
பதிவு எண்
குழந்தையின் பெயர்
பாலினம்
பிறந்த தேதி
பிறந்த இடம்
தந்தை/தாய் பெயர்
மற்ற மாவட்டங்களுக்கு:
சென்னை தவிர மற்ற இடங்களில் இருக்கும் நபர்கள், https://crstn.org/birth_death_tn/BCert என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் தங்கள் பிறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கு தேவையானது:
RCHID எண் (மருத்துமனையில் பெற்ற எண்)
பாலினம்
மாவட்டம்
மருத்துவமனை
பிறந்த தேதி
மொபைல் எண்
வெரிபிகேஷன்
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு:
சாதாரணமாக பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய என்னென்ன நிபந்தனைகள் என்று சொல்கிறோம் . தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். 21 நாட்களுக்குள் பெயர் பதிவு செய்தால் இலவசம். 12 மாதத்துக்குள் உறுதிமொழி மூலம் பெயரை சேர்க்கலாம். 12 மாதங்களுக்கு பிறகு - 15 வருடங்கள் வரை ₹200 தாமதக் கட்டணத்துடன் பெயர் சேர்க்கலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் பெயர் பதிவு செய்வது இயலாது.
முக்கிய குறிப்பு:
பிறப்பு சான்றிதழை பெறும் போது தவறான தகவல் பதிவு செய்யாதீர்கள். இது ஆதார், வாக்காளர் அட்டை போன்ற ஆவணங்களில் பின்னர் சிக்கல் ஏற்படுத்தலாம். அனைத்து ஆவணங்களையும் ஒரே மாதிரி வைத்துக்கொள்ளுங்கள். இது தான் உங்களுக்கு அரசின் அனைத்து பலன்களையும் பெற பேருதவியாக இருக்கும்
0 Comments