அஞ்சல் சேவைகளை எளிமையாக்க 2 புதிய இணையதளங்கள் - மத்திய அரசு அறிமுகம்

 இந்தியாவின் முகவரி முறையை துல்லியமான மற்றும் டிஜிட்டல் அடிப்படையிலான சேவைகளாக மாற்றும் முயற்சியில், மத்திய அரசு 'Know Your DIGIPIN ' மற்றும் ' Know Your PIN Code ' என்ற இரண்டு புதிய டிஜிட்டல் தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

                                                                                     


இந்த தளங்கள், 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேசிய புவியியல் கொள்கை (National Geospatial Policy) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. இது அரசின் சேவைகள் மற்றும் தொழில் துறையில் புதிய நில அளவியல் (Geo-Spatial) உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது. மேலும் ஊர் எல்லைப் பகுதிகள், இருப்பிடம், முகவரிகள் குறித்த குழப்பங்கள் இனி இருக்காது என கூறப்படுகிறது.

DIGIPIN என்றால் என்ன?

DIGIPIN (Digital Postal Index Number) என்பது துல்லியமான ஜியோகோடிங் அடிப்படையிலான முகவரி முறை ஆகும். இது, இந்திய அஞ்சல் துறை, ஐஐடி ஹைதராபாத், மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) உள்ளாட்சி அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. DIGIPIN மூலமாக, ஒவ்வொரு இந்திய குடிமகனின் முகவரியை சரியாக பெற முடியும். மேலும் இதன் மூலம் அரசு மற்றும் தனியார் சேவைகளைப் பெறும் செயல்முறை எளிதாக மாறும்.

DIGIPIN-ஐ எப்படி தெரிந்துகொள்வது?

இந்த இணையதளத்தின் மூலம், நீங்கள் GPS மூலமாக உங்கள் இருப்பிடம் தெரிவித்து உங்கள் DIGIPIN ஐ அறிந்து கொள்ளலாம். அதேபோல், latitude மற்றும் longitude உள்ளிட்ட தகவல்களை உள்ளிடுவதன் மூலம் அந்த இடத்திற்கு ஏற்ற DIGIPIN எண்ணை அறியலாம். இது, டெலிவரி, அவசரப் பணிகள் போன்றவற்றில் துல்லியமாகவும் வேகமாகவும் செயல்பட உதவும். குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் குறைந்த சேவை கிடைக்கும் பகுதிகளில் இது பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

Know Your PIN Code

பின்கோடு முறை 1972ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது, அதன் சரியான எல்லைகளை கண்காணிக்க 'Know Your PIN Code' இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. GNSS தொழில்நுட்பத்தின் மூலம், நீங்கள் இருக்கும் இடத்தை வைத்து உங்களுக்கு சரியான பின் கோட் எண் எது என்பதை கண்டுபிடிக்கலாம். மேலும், பொது மக்களின் கருத்துகளை சேகரிக்கும் வசதியும் இதில் உள்ளது. இதன் மூலம் பின் கோட் தொடர்பான சிக்கல்களை தொடர்ச்சியாக மேம்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த அனைத்து பின் கோட்களுக்கும் ஏற்ற எல்லை வரைபடங்கள் தற்போது Open Government Data Platform கிடைக்கிறது. இது இந்தியா முழுவதும் பின் கோட் செயல்திறனை மேம்படுத்தும் ஒரு முக்கியமான முயற்சியாகும்.

மத்திய அரசால் தொடங்கப்பட்ட Know Your DIGIPIN மற்றும் Know Your PIN Code தளங்கள், இந்தியாவின் டிஜிட்டல் முகவரி அமைப்பை ஒரு புதிய நிலைக்கு உயர்த்தி, போக்குவரத்து, விநியோகம் போன்றவற்றை எளிமையாக மாற்றும் அம்சமாக பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments