TNPSCயில் 7 ஆம் வகுப்பு முடித்தவருக்கான வாய்ப்பு – முழு விவரங்கள் இதோ !
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு பற்றிய செய்தி தாள் அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த கல்லூரியில் சேருவதற்கான தகுதி மற்றும் வயது வரம்பு குறித்து முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் முழு விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TNPSC RIMC வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது 01.07.2023 ஆம் தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 11 1//2 முதல் அதிகபட்சம் 13 வயது வரை இருக்கலாம். 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் ஏழாம் வகுப்பு படிப்பவராக அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
TNPSC RIMC தேர்வு தேதி 2023 :
- பதிவாளர்களுக்கு முதற்கட்டமாக எழுத்து தேர்வு வரும் ஜூலை 2023 அன்று நடைபெற உள்ளது.
- அதில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்த கட்டமாக நேர்காணல் சோதனை நடைபெறவுள்ளது.
- நேர்காணல் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும். இந்த TNPSC RIMC தேர்வு ஆனது சென்னையில் மட்டுமே நடைபெறும்.
TNPSC விண்ணப்பக் கட்டணம்:
தேர்வு கட்டணமாக General Candidates ரூ.600/- மற்றும் SC/ ST விண்ணப்பதாரர்கள் ரூ.555/- செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அனைவரும் வரும் https://www.tnpsc.gov.in/ அதிகாரப்பூர்வ ஆன்லைன் இணைய முகவரி மூலம் இதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Download TNPSC Short Notice
0 Comments