மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1000! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

Follow Us

மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1000! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

தமிழ்நாட்டில் ''கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்'' கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது.

இதுவரை 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதம் ரூ.1000-ஐ நேரடியாக வங்கிக் கணக்கில் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதியில் முன்னதாகவே தொகை வரவு வைக்கப்படுகிறது.

                                                                        



இந்நிலையில், தகுதியுள்ள சில குடும்பத் தலைவிகள் இத்திட்டத்தில் இணையாமல் இருப்பது கவலையளிக்கிறது. இதுவரை மூன்று கட்டமாக முகாம்கள் நடைபெற்றும், சிலர் சேர்க்கப்படாததால் தொடர்ந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை பெண் தலைவிகள் அணுகி ரூ.1000 வழங்கக்கோரி புகார்கள் செய்துவருகின்றனர்.


இதனைத் தீர்க்க, ஜூன் 4-ம் தேதி மாநிலமெங்கும் 'மக்களுடன் முதல்வர்' திட்டம் நடைபெற உள்ளது. இதில், ஏற்கனவே திட்டத்தில் இணைக்கப்படாத பெண்கள் புதியதாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.


இதற்காக 9,000 இடங்களில் முகாம்கள் நடத்தப்படவுள்ளன. மாவட்ட வாரியாக முகாம்கள் நடைபெறும் இடங்கள், அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படுள்ளன.


மாத வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்கும், 3,600 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் மற்றும் குறைந்த நிலம் கொண்டவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள்.


ஆனால் அரசு, வங்கி, பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், மற்றும் 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் இதில் சேர முடியாது.

Post a Comment

0 Comments