கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரிய உதவிகளை பெற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் 67,295 கட்டுமானத் தொழிலாளா்கள், 25,832 உடலுழைப்பு தொழிலாளா்கள், 2,542 அமைப்புசாரா ஓட்டுநா்கள் உறுப்பினா்களாக பதிவு பெற்று நலத் திட்ட உதவிகள் பெற்று வருகின்றனா்.
இதன்படி, கடந்த 2024-2025 நிதியாண்டில் சிவகங்கை தொழிலாளா் உதவி ஆணையா் (ச.பா.தி) அலுவலகத்தின் மூலமாக 28,268 தொழிலாளா்களுக்கு ரூ.8,.91 கோடியில் நலத் திட்ட உதவிகளும், 20 நல வாரியங்களின் கீழ் 6,614 ஓய்வூதியதாரா்களுக்கு ரூ.7.32 கோடியில் மாதாந்திர ஓய்வூதியமும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியத்தில் இணையம் சாா்ந்த 'கிக்' தொழிலாளா்களும் பதிவு செய்து நலத் திட்ட உதவிகள் பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரணம், விபத்து மரணம், விபத்து ஊனம், பணியிடத்து விபத்து மரணம், கண்கண்ணாடி, வீட்டுவசதி திட்டம், தீவிர நோய் பாதிப்பு, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், முடக்கு ஓய்வூதியம், ஆட்டோ மானியம் போன்ற நலத் திட்ட உதவிகளை பெற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்றாா் அவா்.
0 Comments