Zuaitech ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
Zuaitech ஐடி நிறுவனம் என்பது மொபைல் அப் டெவலப்மென்ட், வெப் அப் டெவலப்மென்ட், கிளவுட் சர்வீஸ் இன்டகிரேஷன், ஐஓஎஸ் அப் டெவலப்மென்ட், ஆண்ட்ராய்டு அப் டெவலப்மென்ட், புராஜெக்ட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் இருந்து தான் தற்போது புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
Zuaitech ஐடி நிறுவனத்தில் தற்போது ஜூனியர் UI/UX டிசைனர் (Junior UI/UX Designer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
UI/UX டிசைன் பிரிவில் 0-2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பணி அனுபவம் இல்லாவிட்டாலும் கீழ்கண்ட தகுதிகள் இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம்.
அதன்படி இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இளநிலை பிரிவில் கிராபிக் டிசைன், இன்டகிரேஷன் டிசைன் அல்லது தொடர்புடைய துறையில் டிகிரி முடித்திருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதேபோல் விண்ணப்பதாரர்களுக்கு டிசைன் டூல்ஸ்களான Sketch, Figma, Adobe XD உள்ளிட்டவற்றில் நல்ல புலமை இருக்க வேண்டும்.
மேலும் UI/UX பிரின்சிபல், ரெஸ்பான்சிவ் டிசைன், அக்சஸ்பிலிட்டியுடன் புரிதல் இருக்க வேண்டும். பிரண்ட் எண்ட் டெக்னாலஜிகளான எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜாவா ஸ்கிரிப்ட் உள்ளிட்டவை தெரிந்திருந்தால் அது விண்ணப்பம் செய்வோருக்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட்டாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் வெப் மற்றும் மொபைல் அப்ளிகேஷனனுக்காகன வயர் பிரேம்ஸ், புரோட்டோடைப்ஸ் மற்றும் ஹை பிடலிட்டி டிசைன் உள்ளிட்டவற்றை உருவாக்க வேண்டி இருக்கும். அதேபோல் யூசபிலிட்டி டெஸ்ட்டிங் மேற்கொள்ள வேண்டி இருக்கும். புராடெக்ட் டீமுடன் சேர்ந்து யூசர் ப்ளோ மற்றும் டிசைன் குறித்த தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டி இருக்கும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் அலுவலகம் செல்ல வேண்டாம். வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும். தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது வழங்கப்படும் அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
0 Comments