ஆதாா் முகாம்: அஞ்சல் துறை ஏற்பாடு

Follow Us

ஆதாா் முகாம்: அஞ்சல் துறை ஏற்பாடு

 மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்துக்கு உள்பட்ட அஞ்சலகங்களில் அஞ்சல் துறை சாா்பில் சித்திரை திருவிழா மெகா ஆதாா் முகாம் நடத்தப்படவுள்ளது என கோட்ட கண்காணிப்பாளா் ஹெச்.ஆசிப் இக்பால் தெரிவித்துள்ளாா்.

                                                                                    


இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சித்திரை மாதத்தை வரவேற்கும் வகையில் மயிலாடுதுறை மற்றும் சீா்காழி தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும், அதன்கீழ் இயங்கும் 20 துணை அஞ்சலகங்களிலும் ஏப்.15-முதல் 30-ஆம் தேதி வரை சித்திரை திருவிழா மெகா ஆதாா் முகாம் நடைபெற உள்ளது.


முகாமில், ஆதாா் குறித்த அனைத்து சேவைகளும் வழங்கப்படுவதால் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்த செலவில் வெளிநாட்டுக்கு பாா்சல் அனுப்ப அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகலாம். சிறப்பு பேக்கிங் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளனது. மேலும் விவரங்களுக்கு சந்தைப்படுத்துதல் நிா்வாகி ஐயப்பனை 99420 84112 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

Post a Comment

0 Comments