மாதம் வெறும் ரூ.36 செலுத்தினால் ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ்! மத்திய அரசின் இந்த திட்டம் தெரியுமா?

Follow Us

மாதம் வெறும் ரூ.36 செலுத்தினால் ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ்! மத்திய அரசின் இந்த திட்டம் தெரியுமா?

 பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ் கவரேஜ் வழங்குகிறது. இந்த திட்டம் தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

                                                                                  


Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana Scheme : மத்திய அரசு ஏழை, எளிய மக்களுக்கு கடனுதவி, நிதியுதவி வழங்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருப்பவர்களுக்காக, மருத்துவ காப்பீட்டை தரக்கூடிய டேர்ம் இன்சூரன்ஸ் திட்டம் ஆகும்.

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம்


இந்த திட்டம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை பொருளாதாரத்தில் பின் தங்கியமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டை வழங்குகிறது. காப்பீடு எடுத்திருப்பவர் மரணம் அடைந்தால், அவர்களது குடும்பத்திற்கு இந்த திட்டம் நிதி உதவி வழங்குகிறது. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின்படி ஆண்டுக்கு ரூ.436 பிரீமியம் செலுத்தினால் உங்களுக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும். தெளிவாக சொல்ல வேண்டுமானால் மாதம்தோறும் ரூ.36 ப்ரீமியம் செலுத்தினால் ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும்.

ஆண்டுதோறும் ரூ.436


இந்த திட்டத்தின்படி இடையில் பாலிசிதாரர் உயிரிழந்துவிட்டால், நாமினி அல்லது குடும்பத்தை சேர்ந்தவருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் காப்பீட்டு பிரீமியமாக டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆண்டுதோறும் மே 31ம் தேதிக்குள் வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் கணக்கில் இருந்து ஆண்டுக்கு ரூ.436 டெபிட் செய்யப்படும்.

மெடிக்கல் செக்கப் தேவையில்லை


18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள். இது ஓராண்டுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் கவரேஜ் தரக்கூடிய திட்டம் என்பதால் ஆண்டுதோறும் பாலிசியை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் பாலிசி எடுப்பதற்கு எந்தவிதமான மெடிக்கல் செக்கப்புகளும் தேவையில்லை. காப்பீட்டு பாலிசியின் ஒப்புதல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சில குறிப்பிட்ட நோய்களால் நீங்கள் பாதிக்கப்படவில்லை என்பதை மட்டும் எழுதி தந்தால் போதும். அதே வேளையில் தவறான தகவல் கொடுத்தால் இந்த திட்டத்தில் பயன் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments