மோடி அட்வைஸ்.. இந்தியர்களின் உயிர் காக்கும் கருவி இதான்.. உடனே Mobile எடுங்க.. Sachet டவுன்லோட் பண்ணுங்க..

Follow Us

மோடி அட்வைஸ்.. இந்தியர்களின் உயிர் காக்கும் கருவி இதான்.. உடனே Mobile எடுங்க.. Sachet டவுன்லோட் பண்ணுங்க..

 இந்தியாவில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன் (smartphone) மற்றும் மொபைல் (mobile) பயனர்கள் அனைவரும் கட்டாயம் சாச்செட் ஆப்ஸ் (Sachet App) என்ற புதிய மொபைல் ஆப்ஸ் கருவியை கட்டாயம் பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்த துவங்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு (Prime Minister Narendra Modi) மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சாச்செட் ஆப்ஸா அப்படி என்றால் என்ன? (What is Sachet App) இந்த மொபைல் ஆப்ஸை ஏன் இந்திய மக்கள் அனைவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இதனால் என்ன பயன் என்ற முழு தகவலை இப்போது பார்க்கலாம்.

                                                                      


மன் கி பாத் (Mann Ki Baat) நிகழ்ச்சியின் 121வது எபிசோடில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் நாட்டு மக்களுடன் தொடர்பு கொண்டு பல முக்கியமான தகவல்களை பற்றி பகிர்ந்து கொண்டார். அதில், ஒவ்வொரு இந்திய ஸ்மார்ட்போன் பயனரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் குறித்த தகவலையும் மோடி வெளிப்படுத்தினர். இந்தியாவில் உள்ள அனைத்து மொபைல் பயனர்களும் சாச்செட் ஆப்ஸ் என்ற மொபைல் ஆப்ஸ் ஏன் முக்கியமானது என்பதை அவர் எடுத்துரைத்தார்.


மோடி அட்வைஸ்.. இந்தியர்களின் உயிர் காக்கும் கருவி இதான்.. உடனே Mobile எடுங்க மக்களே:


சாச்செட் ஆப்ஸ்-ஆ? அப்படி என்றால் என்ன? (What is the Sachet App) அது என்ன செய்யும்? அது எப்படி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் பயனளிக்கும்? எப்படி இந்த ஆப்ஸ் உங்களை பாதுகாக்கப்போகிறது என்று, இந்த ஆப்ஸ் பற்றிய அணைத்து விதமான தகவலையும் இப்போது தெரிந்துகொள்ளலாம்.


சாச்செட் ஆப்ஸ் என்பது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (National Disaster Management Authority - NDMA) உருவாக்கப்பட்ட ஒரு தேசிய பேரிடர் எச்சரிக்கை போர்டல் மற்றும் மொபைல் செயலி ஆகும். இது இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்படக்கூடிய இயற்கை பேரிடர்கள் தொடர்பான நிகழ்நேர எச்சரிக்கைகளை (natural disaster alerts) உங்கள் போனுக்கே வரவழைக்கும் ஒரு சிறந்த மொபைல் கருவியாகும் (mobile tool). உங்கள் லொகேஷனில் இயற்கை பேரிடர் எழும் அபாயம் இருந்தால், இது உடனே எச்சரிக்கை செய்தியை உங்களுக்கு அனுப்பும்.


Sachet ஆப்ஸை எப்படி உங்கள் Android மற்றும் iOS போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது?


இயற்கை பேரிடர்கள் (natural disasters) என்று குறிப்பிடுகையில் கனமழை (heavy rainfall), சூறாவளி (cyclones), வெள்ளம் (floods) அல்லது பூகம்பம் (earthquakes) போன்ற அனைத்து விதமான பேரிடர்கள் குறித்த முக்கியமான எச்சரிக்கை செய்திகளை இந்த ஆப்ஸ் உங்கள் போனிற்கு உடனுக்குடன் அனுப்பும். நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தகவல்களையும் இந்த ஆப்ஸ் உங்களுக்கு அனுப்புகிறது. சரி, இந்த Sachet ஆப்ஸை எப்படி உங்கள் போனில் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.


- உங்கள் ஸ்மார்ட்போனில் Sachet ஆப்ஸை பதிவிறக்கம் செய்வது மிகவும் சுலபமானது.


- ஆண்ட்ராய்டு (Android) பயனர்கள் வழக்கம் போல, Google Play Store இலிருந்து இந்த ஆப்ஸை டவுன்லோட் (download) செய்யலாம்.


- ஐபோன் மற்றும் ஐஓஎஸ் (iPhone and iOS) பயனர்கள், Apple App Store இலிருந்து இதை பதிவிறக்கம் செய்யலாம்.


- நீங்கள் டவுன்லோட் செய்தவுடன், ஆப்ஸ் தானாக உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யப்படும்.


- உங்கள் போனில் ஜிபிஎஸ் லொக்கேஷன் (GPS location) ON செய்துகொள்ளுங்கள்.


- அவ்வளவு தான் வேலை முடிந்தது.


Sachet App எப்படி நீங்கள் இருக்கும் இடத்திற்கான எச்சரிக்கை செய்திகளை உங்களுக்கு அனுப்பும்?


இந்த ஆப்ஸ் உங்கள் ஜிபிஎஸ் லொக்கேஷன் மூலம் நீங்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்ற தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும். இந்த ஆப்ஸ் ஜியோ-டார்கெட் அலெர்ட்களை (geo-targeted alerts) உங்களுக்கு அனுப்பும். நீங்கள் இருக்கும் இடத்தின் குறிப்பிடதக்க வானிலை முறைகள் (weather patterns), காற்றின் வேகம் (wind speed), மழைப்பொழிவு (rainfall) மற்றும் வெப்பநிலையை (temperature) இந்த ஆப்ஸ் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும்.


உங்கள் பகுதியில் பேரிடர் குறித்த எச்சரிக்கை அறிகுறிகள் ஏதேனும் தோன்றினால், இந்த செயலி உடனடியாக உங்களுக்கு ஒரு அறிவிப்பை (disaster alert notifications) அனுப்பும். இதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உங்களுக்கு போதுமான நேரத்தை இந்த ஆப்ஸ் முன்கூட்டியே திட்டம் இடம் வழிவகுக்குகிறது. இதன் வழி வரும் அனைத்து தகவலும் அதிகாரப்பூர்வ அரசாங்க ஆதாரங்கள் மூலம் அனுப்பப்படுகின்றன. இதனால், தகவல்கள் உண்மையானவை மற்றும் நம்பகமானவை என்பதை உறுதி செய்கிறது.


Sachet Apps ஒரு உயிர் காக்கும் கருவி:


எச்சரிக்கைகளைத் தவிர, பேரிடர் ஏற்படும் முன், பேரிடரின் போது மற்றும் பேரிடருக்கு பின் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதற்கான முக்கியமான வழிகாட்டுதல்களையும் சாச்செட் ஆப் உங்களுக்கு வழங்குகிறது. அது பூகம்பமாக இருந்தாலும் சரி, வெள்ளமாக இருந்தாலும் சரி, சூறாவளியாக இருந்தாலும் சரி, அல்லது வெப்ப அலையாக இருந்தாலும் சரி, உயிர்களைக் காப்பாற்றக்கூடிய எளிய மற்றும் நடைமுறை ஆலோசனைகளை இந்த ஆப்ஸ் வழங்குகிறது.


இதுவொரு உயிர் காக்கும் கருவியாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதை அனைத்து பொதுமக்களும் கட்டாயம் பயன்படுத்தி பயன்பெற வேண்டுமென்று மோடி அறிவுரை வழங்கியுள்ளார்

Post a Comment

0 Comments