தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று, அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலின் 9 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு 1.1.2025 அன்று தேதிப்படி அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படும். 1.10.2025 முதல் அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெறலாம் என்பது உள்பட 9 அறிவிப்புகளை சட்டப்பேரவை விதி 110ன் கீழ் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடந்தது. அப்போது சட்டசபை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலில் 9 அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:- அகில இந்திய அளவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. இதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பங்கும் இருந்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கு பாராட்டுகள் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு 9 அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
9 புதிய அறிவிப்புகள்
* அரசு ஊழியர்களுக்கு 01.01.2025 முதல் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படும்.
* தமிழக அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு ஓராண்டாக உயர்த்தப்படும். அதாவது பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு 9 மாதங்களாக இருந்த நிலையில் ஓராண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
* அரசு அலுவலகர்கள் ஈட்டிய விடுப்புக்கு பண பலன் பெறுவது இந்த ஆண்டே அமலுக்கு வரும்.
* அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.
* அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் 10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
* அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு
01.01.2025 முதல் அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மாநில அரசு பணியாளர்களுக்கும் 01.01.2025 முதல் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியாளர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வினை நடைமுறைப்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 1,652 கோடி ரூபாய் கூடுதல் நிதி செலவிடப்படும்.
* விடுப்பு சரண் இந்தாண்டே அமல்
"அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை, வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்!" இதன் மூலம் சுமார் 8 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவர். இதற்காக ரூ.3, 561 கோடி கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
* அகவிலைப்படி 2% உயர்வு
ஒன்றிய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்பட்டதன் அடிப்படையில், மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 01-01-2025 முதல் அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும்.
* கல்வி முன்பணம் உயர்வு
அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து தொழிற்கல்வி பயில ரூ. 1,00,000/- ஆகவும் கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் பயில ரூ. 50,000/- ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்!
* பண்டிகை கால முன்பணம் உயர்வு
அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்கள் குடும்பத்தினரும் பண்டிகை காலங்களை சிறப்பாக கொண்டாடும் வகையில், ஏற்கனவே இதுவரை வழங்கப்பட்டு வரும் ரூ.10,000 பண்டிகை கால முன்பணம் இனி ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.
* திருமண முன்பணம் பலமடங்கு உயர்வு
திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு ரூ. 10,000/- மற்றும் ஆண்களுக்கு ரூ. 6,000/- வழங்கப்படுகிறது. இதனை பலமடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் பொதுவாக ரூ. 5,00,000/-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* விடுப்பு நாட்களை சரண் செய்யலாம்
கோவிட் 19 பெருந்தொற்றின் போது அரசின் நிதிச்சுமை மீது ஏற்பட்ட பெருஞ்சுமை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யப்படும் நடைமுறையை 01.04.2026 முதல் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் செயல்படுத்திட 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்டது. இருந்தாலும் இந்த ஆண்டே இதனை செயல்படுத்த வேண்டும் என்று அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன்பேரில் ஈட்டிய விடுப்பு நாட்களை 15 நாட்கள் வரை 1.10.2025 வரை சரண் செய்து பணப்பலன் பெறலாம் என்று மகிழ்ச்சியோடு அறிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் 8 லட்சம் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ.3,565 கோடி கூடுதல் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.
0 Comments