புது ரூல்ஸ்.. ஏப்.1 முதல் அமல்.. இனிமே 1,000 ரூபாயோ.. 5,000 ரூபாயோ.. பணம் அனுப்ப இது கட்டாயம்.. என்ன மாறுது?

 பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் பணத்தை அனுப்புவதில் அமலாகும்படியான புதிய விதிகளை ஆர்பிஐ (RBI) என்று அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) ஆனது கொண்டுவந்து இருக்கிறது.

                                                                              


இந்த விதிகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாகின்றன. இனிமேல் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் அனுப்பும்போது இதை செய்ய வேண்டி இருக்கும். இந்த புதிய விதிகள் என்ன சொல்கிறது? பணம் அனுப்பும்போது என்ன நடக்கும்? உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.


இந்த ஏப்ரல் மாதத்தில் யுபிஐ (UPI) என்றழைக்கப்படும் யுனிஃபைடு பேமண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) சேவைகள் தொடங்கி பேங்க் மினிமம் பேலன்ஸ் (Bank Minimum Balance) வரையில் பல்வேறு விதிகள் அமலுக்கு வருகின்றன. இதில் ஆர்டிஜிஎஸ் நெப்ட் பரிவர்த்தனை விதிகள் (RTGS NEFT Transactions Rules) ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கும் அமல் செய்யப்படுகிறது.

இந்த பரிவர்த்தனைகளில் பயனாளி கணக்கு பெயர் சரிபார்ப்பு வெரிபிகேஷன் (Beneficiary Account Name Verification) புதிதாக கொண்டுவரப்பட இருக்கிறது. ஆகவே, இந்த கூடுதல் வெரிபிகேஷனை செய்த பிறகே ஆர்டிஜிஎஸ் அல்லது நெப்ட் பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை அனுப்ப முடியும். 1,000 ரூபாயோ, 5,000 ரூபாயோ அல்லது 1 லட்சம் ரூபாயோ அனைத்து பரிவர்த்தனைக்கும் இது பொருந்தும்.


இதனால் கஸ்டமர்களிடையே பணத்தை அனுப்ப படாதபாடு ஏற்படுமோ என்று கேள்வி எழுவது தெரிகிறது. ஆனால், இந்த விதிகளால் பேங்க் கஸ்டமர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது. சொல்லப்போனால், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவானது, இந்த பயனாளி கணக்கு பெயர் சரிபார்ப்பு வெரிபிகேஷனை அனைத்து பேங்குகளும் அமல்படுத்த வேண்டும் என்றே உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது, ஆர்டிஜிஎஸ் அல்லது நெப்ட் மூலம் பணத்தை அனுப்பும்போது அக்கவுண்ட் நம்பர் (Account Number) மற்றும் ஐஎப்எஸ்சி கோட் (IFSC Code) மட்டுமல்லாமல், அந்த பணத்தை பெறுபவரின் பெறுபவரின் பெயர் விவரங்களும் இடம்பெறும்படு சேவை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பணத்தை பெறுபவர் யார் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இது புதிய விதிகள் என்று சொல்ல முடியாது.


ஏற்கனவே, யுபிஐ (UPI) மற்றும் ஐஎம்பிஎஸ் (IMPS) பரிவர்த்தனைகளில் கிடைக்கிறது. இப்போது, ஆர்டிஜிஎஸ் அல்லது நெப்ட் பரிவர்த்தனைகளுக்கும் வந்துள்ளது. ஆகவே, இனிமேல் இந்த பரிவர்த்தனைகளிலும் பணத்தை பெறுபவரின் பெயரை வெரிபிகேஷன் செய்யும்படி பேங்க் நிறுவனங்கள் அதன் கஸ்டமர்களுக்கு சேவைகளை கொடுக்க இருக்கிறது.

இந்த விதிகளால் அக்கவுண்ட் நம்பர், ஐஎப்எஸ்சி கோடை வெரிபிகேஷன் செய்வதை போலவே இனிமேல் கூடுதலாக பயனாளி கணக்கு பெயரையும் வெரிபிகேஷன் செய்ய வேண்டி இருக்கும். ஆகவே, பெயரில் ஏதாவது மாற்றங்கள் அல்லது சிக்கல் இருந்தால் பணத்தை அனுப்ப முடியாமல் போக வாய்ப்புள்ளது. இதேபோல ஏப்ரல் 1ஆம் தேதி முதல் யுபிஐ விதிகள் அமலாகின்றன.


இந்த விதிகளை என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது அமல் செய்ய இருக்கிறது. இதன் மூலம் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களில் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பர்களுக்கு சிக்கல் ஏற்பட இருக்கிறது. ஆனால், அனைவருக்கும் பொருந்தாது.

அதாவது, ரீசார்ஜ் செய்யப்படாமல் இருக்கும் செயலற்ற (Inactive) மொபைல் நம்பர்கள் அல்லது வேறுறொரு கஸ்டமர்களுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட மொபைல் நம்பர்கள் (Recycled Mobile Numbers) ஆகியவை யுபிஐ அக்கவுண்ட்களில் இருந்து நீக்கப்பட இருக்கிறது. இதனால், அந்த நம்பர்களில் யாராவது யுபிஐ அக்கவுண்ட்களை வைத்திருந்தால் உடனேயே மாற்றி கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments