புதுச்சேரி அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முக்கிய பிரிவான காவல் புகார் ஆணையத்தில் தலைவர் பணி காலியாக உள்ளது ,.
இந்த பணியிடத்தை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை புதுச்சேரி அரசர்கள் தற்போது வெளியிட்டுள்ளது . யார் விண்ணப்பிக்கலாம் ? என்ன தகுதி வேண்டும் ? எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்டத் தகவல்களைத் தெரிந்துகொள்வது தொடர்ந்து படியுங்கள்.
பணியின் பெயர் :
காவல் புகார் ஆணையத் தலைவர்
காலியிடம் : 1
யார் விண்ணப்பிக்கலாம் ?
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி / மாவட்ட நீதிபதி / செயலாளர் பதவியில் உள்ள ஓய்வுபெற்ற குடிமைப் பணி அதிகாரி ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எவ்வளவு நாள் வேலை ?
ஆரம்பத்தில் பணியமர்த்தப்பட்ட நாளிலிருந்து 3 ஆண்டுகள் காலத்திற்கு பணி இருக்கும்,
பின்னர் இது புதுச்சேரி காவல்துறை புகார் ஆணையத்தின் தேவைக்கேற்ப நீட்டிக்கப்படலாம்.
விண்ணப்ப கட்டணம் : ஏதுமில்லை
தேர்வு முறை : விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பணிக்கு பொருந்தும் நபர்கள் பணியில் சேர அழைக்கப்படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது ?
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த பணியிடத்திற்கான விண்ணப்ப படிவத்தை புதுச்சேரி அரசின் இணையதளத்தில் (www.py.gov.in) பதிவிறக்கம் செய்யலாம். பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பம் மற்றும் விண்ணப்பத்திற்கு தேவையான ஆவண நகல்களை இணைத்து 07.04.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் அல்லது அதற்கு முன் கீழ்காணும் முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி :
அரசு துணைச் செயலாளர் (முகப்பு),
III மாடி, தலைமைச் செயலகம்,
புதுச்சேரி
முக்கிய தேதிகள் :விண்ணப்ப தொடக்க தேதி : 07-03-2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07-04-2025
0 Comments