உணவு மசாலா பொடிகள் தயாரிக்கும் பயிற்சி

 சென்னை கிண்டியில் உள்ள எம்எஸ்எம்இ தொழில்நுட்ப வளர்ச்சி மையம் சார்பில், உணவு மசாலா பொடிகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஏப்.11 முதல் 13-ம் தேதி வரை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை இப்பயிற்சி நடைபெறும்.

                                                                                


சாம்பார் பொடி, ரசப் பொடி, முட்டை கிரேவி மசாலா, சிக்கன் கறி மசாலா, சிக்கன் 65 மசாலா, சில்லி சிக்கன் மசாலா, மட்டன் மசாலா, கரம் மசாலா, பிரியாணி மசாலா, மீன் குழம்பு மசாலா, மீன் வறுவல் மசாலா ஆகியவை தயாரிப்பது குறித்து பயிற்சியில் கற்றுத் தரப்படும்.


மேலும், மசாலாவுக்கான மூலப் பொருட்களை வாங்கும் வழிமுறைகள், சுத்தம் செய்யும் முறை, மசாலா பொருட்களில் கலப்படத்தை கண்டறிதல், மசாலா பொருட்களின் சந்தை வாய்ப்புகள், ஏற்றுமதி மற்றும் அரசாங்கத்தின் ஏற்றுமதி ஊக்குவிப்பு ஆகியவை குறித்தும் கற்றுத் தரப்படும்.

இப்பயிற்சி செய்முறை விளக்கத்துடன் நடைபெறும். ஆண், பெண் இருபாலரும் சேரலாம். வேலைக்கு செல்லவும், சுயமாக தொழில் தொடங்கவும் இப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். பயிற்சி கட்டணம் ரூ.5,900. பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு 82483 09134, 72002 59858 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.



Post a Comment

0 Comments