FD Scheme : மூத்த குடிமக்கள் FD-க்கு 8% வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

Follow Us

FD Scheme : மூத்த குடிமக்கள் FD-க்கு 8% வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

 பொதுமக்கள் மத்தியில் சேமிப்பு (Savings) மற்றும் முதலீட்டின் (Investment) மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ள நிலையில், ஏராளமான பொதுமக்கள் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர்.

                                                                               


அந்த வகையில், சேமிப்பதற்கு பெரும்பாலான மக்களின் முதல் தேர்வாக உள்ளது நிலையான வைப்பு நிதி (FD - Fixed Deposit) திட்டம் தான். இந்த திட்டம் மிகவும் பாதுகாப்பாக கருதப்படும் நிலையில், சிறந்த லாபமும் கிடைப்பதால் ஏராளமான மக்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்கின்றனர்.

மூத்த குடிமக்களுக்கான FD-க்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்


நிலையான வைப்பு நிதி திட்டங்கள் பொது குடிமக்களை விடவும் மூத்த குடிமக்களுக்கு சிறந்த பலன்களை வழங்குகிறது. அதாவது, நிலையான வைப்பு நிதி திட்டத்தில் பொது குடிமக்களை விட மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, மூத்த குடிமக்களுக்கான சிறந்த திட்டமாக இது கருதப்படுகிறது. இந்த நிலையில், நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8 சதவீதம் வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மூத்த குடிமக்கள் FD - 8% வரை வட்டி வழங்கும் வங்கிகள்


இந்தியாவில் உள்ள பல முன்னணி வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான எஃப்டிகளுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

ஹெச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) தனது மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.

ஆக்சிஸ் வங்கி (Axis Bank) தனது மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.

எஸ் வங்கி (YES Bank) தனது மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8 சதவீதம் வட்டி வழங்குகிறது.

இண்டஸ்லேண்ட் வங்கி (Indusland Bank) தனது மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.

டிசிபி வங்கி ( DCB Bank) தனது மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.

Post a Comment

0 Comments