ரூ.1 லட்சம் மானியத்தோடு பெண்களுக்கு ஆட்டோ.! இரண்டாம் கட்டம் அறிவிப்பு- விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

Follow Us

ரூ.1 லட்சம் மானியத்தோடு பெண்களுக்கு ஆட்டோ.! இரண்டாம் கட்டம் அறிவிப்பு- விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

 தமிழக அரசின் பிங்க் ஆட்டோ திட்டம் கணவனை இழந்த மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பை வழங்குகிறது.

இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, ஏப்ரல் 6, 2025 வரை விண்ணப்பிக்கலாம்.

                                                                               


Pink Auto Phase 2 scheme : தமிழக அரசு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு சுழல் நிதி, மகளிர் உரிமை தொகை, பெண்கள் சுயமாக தொழில் தொடங்க கடன் உதவி திட்டங்கள், மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் சென்னை மாநகரில் பிங்க் ஆட்டோ திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் கணவனை இழந்த பெண்கள், சமூகத்தில் தனியாக வாழும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

சென்னை மாநகரில் பெண்களுக்கான சுயதொழில் உருவாக்கும் விதமாக 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் வங்கிக் கடன் மானியமாக வழங்கப்பட்டது. இதனையடுத்து பிங்க் நிற ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு சமூக நலத்துறை சார்பாக பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.


அதன் படி ஜி.பி.எஸ். கருவியின் செயல்பாடு அவசர காலங்களில் காவல்துறையை தொடர்பு கொள்வது, சுய தற்காப்பு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டு இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் மார்ச் 8ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக பெண்களுக்கு இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்தின் கீழ் பயன்பெற இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைய விருப்பமுள்ள பெண்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி 06.04.2025 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.


* கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


* 20 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.


•ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.


* சென்னையில் குடியிருக்க வேண்டும்.


விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :


மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு (அ) தெற்கு), 8ஆவது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை 600001.

Post a Comment

0 Comments