முன்னணி ஐடி நிறுவனமான கேப்ஜெமினியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய நாளை கடைசி நாளாகும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை, திருச்சி, கோவையில் பணி நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
இப்போது ஐடி நிறுவனங்களில் பணி செய்ய பலருக்கும் அதிக ஆர்வம் உள்ளது. முன்னணி ஐடி நிறுவனங்களில் திறமையை பொறுத்து நல்ல சம்பளம் வழங்கப்படுவதால் பலருக்கும் ஐடி துறையில் நுழைய வேண்டும் என்பது கனவாகவே இருந்து வருகிறது.
அந்த வகையில் பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக கேப்ஜெமினி விளங்கி வருகிறது. இந்த ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியாகி உள்ள பணி குறித்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
கேப்ஜெமினி ஐடி நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் எம்சிஏ, எம்எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி) படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பதாரர்களுக்கு நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். நல்ல அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் என்பது இருக்க வேண்டும். தனியாகவும், டீமாகவும் பணியாற்ற ரெடியாக இருக்க வேண்டும். கேப்ஜெமினியின் எந்த பிராஞ்சாக இருந்தாலும் பணியாற்ற தயாராகி இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.5.50 லட்சம் முதல் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.7.50 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது. சம்பளத்தை பொறுத்தவரை 2 பிரிவாக பிரித்து வழங்கப்படும். அதன்படி அனலிஸ்ட் பணிக்கு ரூ.5.50 லட்சம் சம்பளத்துடன் ரூ.25 ஆயிரம் ஒன் டைம் இன்சென்டிவ் என்பது வழங்கப்பட உள்ளது. சீனியர் அனலிஸ்ட் பணிக்கு ஆண்டுக்கு ரூ.7.50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய மார்ச் 26ம் தேதி (நாளை) கடைசி நாளாகும். அன்றைய தினம் நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு Active Digi Locker Account என்பது இருக்க வேண்டும். அதனை ஆதார் எண்ணுடன் இணைத்து வைத்திருக்க வேண்டும்.
இது ஒரு PAN India வேலைவாய்ப்பாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியாவில் உள்ள எந்த இடங்களில் வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்படலாம். அதன்படி பார்த்தால் நம் நாட்டில் பெங்களூர், புவனேஸ்வர், காந்தி நகர், குர்கிராம், ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, நொய்டா, புனே உள்ளிட்ட இடங்களிலும், தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் பணி நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டம் இருப்பின் தமிழகத்தில் பணி செய்யும் வாய்ப்பு என்பது கிடைக்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
0 Comments