அரசு பணியாளர்களுக்கு செல்போன் வாங்க ரூ.10,000!! தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

 தமிழக அரசு மாநிலத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு பல் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதுடன் அரசு பணியாளர்களுக்கும் மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு நலத்திட்டங்களையும் சிறப்பு சலுகைகளையும் வழங்கி வருகிறது.

                                                                              


அந்த வகையில் அரசுத்துறை ஒன்றுக்கு அதன் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் அனைவருக்கும் செல்போன் வாங்குவதற்காக 10,000 ரூபாய் வழங்க முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.


அதன்படி, தமிழக மின்சார வாரியத்தில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் மின் கணக்கெடுப்பை 2 மாதங்களுக்கு ஒரு முறை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கணக்கெடுப்பின் பொழுது அவர்கள், அவர்களுக்கான பகுதிகளுக்கு சென்று அங்கு ஒவ்வொரு வீட்டிலும் மின்சார கணக்கெடுப்பை பதிவு செய்து பயணர்களின் செல்போனிற்கு ஜிமெயில் அல்லது எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப வேண்டிய நிலையில் பணிபுரிகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது வேலை பார்க்கக் கூடிய மின்சாரத்துறை ஊழியர்கள் கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கு அவரவருடைய சொந்த செல்போன்களில் மின் கணக்கிட்டு அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பயணங்கள் உடைய தரவுகளை உள்ளீடு செய்து அதன் பின்பு மின்கட்டணத்தை நுகர்வோருக்கு அனுப்புகின்றனர். இதுபோன்ற தங்களுடைய தனிப்பட்ட செல்போன்களில் மேற்கொள்வதால் தங்களுடைய தரவுகள் திருடப்படுவதாகவும் எனவே இத்துறையில் பணிபுரியக்கூடிய அனைவருக்கும் தனித்தனியே செல்போன்கள் வாங்கிக் கொடுக்கும் படியும் தமிழ்நாடு மின்சார துறை ஊழியர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழ்நாடு அரசு மின்சார துறை ஊழியர்களுக்கு செல்போன் வாங்குவதற்கு 10000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறது. ஊழியர்கள் செல்போனை வாங்கிவிட்டு அதனுடைய பில்லை அலுவலகத்தில் காட்டினால் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments