இனி இவங்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்.. சட்டசபையில் அமைச்சர் தந்த சர்ப்ரைஸ்.. அப்படிபோடு

 சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று மகளிர் உரிமை தொகை குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவது தொடர்பாக அமைச்சர் கீதா ஜீவன் கருத்து தெரிவித்தார்.

                                                                                     


மகளிர் உரிமை தொகை திட்டம் 2 மாதத்தில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தமிழக பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் யார் எல்லாம் இதற்கு இனி விண்ணப்பிக்க முடியும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதை பற்றி இங்கே பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசு சார்பாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அவர் மகளிர் நலன் சார்ந்த அறிவிப்புகள் பலவற்றை வெளியிட்டார்.

தமிழக பட்ஜெட்டில் பெண்கள் நலன் சார்ந்த பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும். விடியல் பயணம் காரணமாக பேருந்து பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 60 வரை உயர்ந்துள்ளது. மாதம் 888 ரூபாயை பெண்கள் சேமிப்பதாக திட்டக்குழு அறிக்கை கூறுகிறது.

பணிபுரியும் பெண்களின் வசதிக்காக மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் கட்டப்படும். மாவட்டம்தோறும் இவ்வகை விடுதிகள் அமைக்கும் இலக்கை நோக்கி அரசு செல்கிறது. மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படும்.

ரூ.77 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் 10 இடங்களில் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும், என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. புதுமைப் பெண் திட்டத்திற்கு ரூ. 420 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 10,000 சுய உதவி குழுக்கள் வழியாக ரூ. 37,000 கோடி கடனுதவி வழங்கப்படும், போன்ற பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. 

மகளிர் உரிமை தொகை சட்டசபையில் அறிவிப்பு 

தமிழ்நாடு சட்டசபையில் இன்று மகளிர் உரிமை தொகை குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவது தொடர்பாக அமைச்சர் கீதா ஜீவன் கருத்து தெரிவித்தார். அதன்படி மனநலம் குன்றிய குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் இன்று அறிவித்தார். 

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது 

1. ஒரு ரேஷன் கார்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு மட்டுமே பணம் கிடைக்கும். இரண்டாவது பெண்ணுக்கு பணம் தரப்படாது.

2. இதற்காக இரண்டாவது பெண் தனியாக ரேஷன் வாங்கினாலும் கிடைக்காது. ஏனென்றால் ஒரே வீட்டில் இருந்தால் சோதனையின் போது பணம் தர கூடாது என்று முடிவு எடுக்கப்படும். 

3. கள ஆய்வில் ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் இருந்தால் அதில் இரண்டாவது ரேஷன் நீக்கப்படும். 

4. அரசு பென்ஷன் பெற்றால் அவர்களுக்கு கண்டிப்பாக பணம் கிடைக்காது. 

5. அரசின் வேறு வகையான வருமானம் பெற்றாலும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது. 

6. அரசு ஊழியர் அல்லாத கணவர்களின் மனைவிகளுக்கு பொருந்தும். அவர்களுக்கு பணம் வழங்கப்படும். 

7. புதிதாக திருமணம் ஆகி ரேஷன் கார்டு பெற்றவர்கள். அரசு ஊழியர் அல்லாத பட்சத்தில் வழங்கப்படும்.


Post a Comment

0 Comments