இபிஎஃப்ஓ.. 3 நாட்களில் நடக்கும் அதிசயம்.. நாடு முழுக்க உள்ள தனியார், அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்

 சென்னை: EPFO சார்பாக கடந்த சில நாட்களில் 21.6 மில்லியன் கிளைம்களை 3 நாள் காலக்கெடுவுக்குள் வழங்கி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஆட்டோ மோட் முறையில் இத்தனை கிளைம்களை நிறைவேற்றி உள்ளதாக அரசு தெரிவித்து உள்ளது.

                                                                                  


இப்போது,​​60 சதவீத அட்வான்ஸ் (திரும்பப் பெறுதல்) EPFO உரிமைகோரல்கள் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படுகின்றன என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்துள்ளார். இதனால் வேகமாக பணம் மக்களுக்கு வழங்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார். அதாவது அதிகாரிகள் சோதனை செய்யாமல் தானாக கணினியே ஆவணங்களை சோதனை செய்து 3 நாட்களில் பணத்தை வழங்கிவிடும்.

EPFO அட்வான்ஸ் கேட்டு 1-2 மாதம் காத்திருக்க வேண்டியது இல்லை. முன்பு இதற்கான கட்டுப்பாடுகள் இருந்தது. இப்போது 1 லட்சம் ரூபாய் வரை எளிதாக பணம் எடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு உள்ளது. நோய்/மருத்துவமனை தொடர்பான உரிமைகோரல்கள் மட்டுமன்றி, வீடு, கல்வி மற்றும் திருமணம் ஆகியவற்றிற்கான அட்வான்ஸ் தொகையும் ஆட்டோ மோடு முறையில் சேர்க்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் EPFO சார்பாக கடந்த சில நாட்களில் 21.6 மில்லியன் கிளைம்களை 3 நாள் காலக்கெடுவுக்குள் வழங்கி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்புகளில் தற்போது 12 சதவீத வரம்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த வரம்பு தற்போது நீக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தனிப்பட்ட வகையில் சொந்தமாக சேமிப்பு பழக்கங்கள் இருக்கும். அந்த பழக்கங்களை அடிப்படையாக வைத்து வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்பு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்பு உயர்த்திக்கொள்ளலாம். தற்போது 1800 ரூபாய் கொடுப்பவர்கள் தேவைப்பட்டால் கூடுதலாக கொடுக்கலாம். 

விரைவில் ஏடிஎம் அடிப்படையிலான PF டெபிட் முறை தற்போது பிஎப் பணம் எடுப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். இது மாற்றப்படலாம் என்கிறார்கள். அதன்படி சந்தாதாரர்கள் நேரடியாக ஏடிஎம்கள் மூலம் பிஎஃப் தொகையை பெறும் வகையில் திட்டத்தை மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

ஏடிஎம்கள் மூலம் பிஎஃப் எடுப்பதற்கு வசதியாக கார்டுகளை வழங்கும் பணியிலும் தொழிலாளர் அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசதி மே-ஜூன் 2025க்குள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது EPFO​​சந்தாதாரர்களுக்கு மேலும் வசதியை அளிக்கும் அதே சமயம் கடந்த சில நாட்களுக்கு முன்தான் பிஎப் கணக்கிற்கான வட்டிப் பணத்தை அரசு விரைவில் வங்கி கணக்கில் செலுத்தும் என்று அறிவித்தது. ஆனால் இன்னும் அந்த பணம் செலுத்தப்படவில்லை. 

சுமார் 7 கோடி ஊழியர்கள் இதன் பலனைப் பெறுவார்கள். 2023-24 நிதியாண்டுக்கான (FY24) சம்பளம் பெறும் தொழிலாளர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்களில் விசாரித்ததில் முக்கியமான சில தகவல்கள் வெளியாகின.

கடந்த பிப்ரவரியில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக உயர்த்தியது. வட்டி மாதந்தோறும் கணக்கிடப்பட்டு, நிதியாண்டின் குறிப்பிட்ட சில மாதங்களில் அந்த வட்டி டெபாசிட் செய்யப்படும்.இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்களில் விசாரித்ததில், இந்த செயல்முறையானது பைப்லைனில் உள்ளது, விரைவில் அங்கு காண்பிக்கப்படும். வட்டி வரவு வைக்கப்படும் போதெல்லாம், அது முழுமையாக செலுத்தப்படும். வட்டி இழப்பு ஏற்படாது. உங்கள் இபிஎஃப் கணக்கில் 1 லட்சம் ரூபாய் பிஎஃப் ஆக டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், அதற்கு வட்டியாக 8.25 ஆயிரம் ரூபாய் வரும். இதுதான் கணக்கு. கண்டிப்பாக பணம் அளிக்கப்படும். FY23க்கான வட்டி மார்ச் 2024 நிலவரப்படி 281.7 மில்லியன் EPFO​​உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments