சென்னை: அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
புதிய அகவிலைப்படி உயர்வு ஜனவரி மாதம் அமலுக்கு வந்தது. இதையடுத்து மார்ச் மாதமே அடிப்படை சம்பளத்துடன் DA விரைவில் இணைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி வந்தது. அதாவது அடிப்படை சம்பளம் - டிஏ இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால் அதை மத்திய அரசு தற்போது மறுத்து உள்ளது.
முன்னதாக 2004ல், அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டிய பிறகு, அடிப்படை ஊதியத்துடன் DA இணைக்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக அகவிலைப்படி 50 சதவீத அளவை மீறிய போதிலும், அடிப்படை ஊதியத்துடன் DA இணைக்கப்படாது என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில்தான் அடிப்படை சம்பளத்துடன் DA விரைவில் இணைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி வந்தது. பொதுவாக அகவிலைப்படி 50% தாண்டினால்.. அதை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பார்கள். இதனால் வரும் ஜனவரி மாதம் இரண்டும் இணைக்கப்படலாம் என்று தகவல் வந்தது. ஆனால் ஜனவரியில் அப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
8வது மத்திய ஊதியக் குழு (CPC) அறிக்கையைத் தயாரிப்பதற்கு முன் இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு ஊழியர்கள்/ஓய்வூதியம் பெறுபவர்களின் 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
எவ்வளவு சம்பளம் உயரும்
எவ்வளவு சம்பளம் உயரும்
8வது ஊதியக்குழு வந்தால் அது அரசு ஊழியர்களுக்கு சாதகமாக அமையும். மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக்குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என தகவல் வெளியாகி உள்ளது. 6வது ஊதியக் குழுவில் 7,000 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டது. 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊழியர்களுக்கு தற்போது குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் 18,000 ரூபாய் கிடைக்கிறது. 8வது ஊதியக் குழுவின் கீழ் குறைந்தபட்ச சம்பளம்: இப்படிப்பட்ட நிலையில்தான் 8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என தகவல் வெளியாகி உள்ளது. 7வது ஊதியக் குழுவின் கீழ் 2.57 ஃபிட்மென்ட் காரணி உள்ளது.
இது 8வது ஊதியக்குழுவில் குறைந்தது 2.86 பிட்மென்ட் காரணியாக உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 2.86 என்ற ஃபிட்மென்ட் காரணிக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தால், அரசு
ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் அதிகரித்து ரூ. 51,480 ஆக இருக்கும், இது தற்போதைய ரூ.18,000 உடன் ஒப்பிடும் போது 186 சதவீதம் உயர்வு ஆகும், மொத்தமாக 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது மத்திய ஊதியக் குழுவை உருவாக்குவதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இது அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பிற சலுகைகள் தொடர்பான பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு அதன் பரிந்துரைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும். 7வது ஊதியக் குழு அமலுக்கு வந்ததில் இருந்து 10 ஆண்டுகள் இடைவெளியுடன், அடுத்த ஊதியக் குழுவை 2025 அமல்படுத்த வேண்டும். பொதுவாக இரண்டு வெவ்வேறு ஊதியக் கமிஷன்களை அமல்படுத்துவதற்கு இடையே 10 ஆண்டுகள் இடைவெளியை மத்திய அரசு பின்பற்றுகிறது.
0 Comments