கிராம நத்தம் நிலங்களில் நீண்டகாலமாக குடியிருந்தால், அந்த நிலத்தை அரசு நிலமாகவோ, ஆக்கிரமிப்பாகவோ கருத முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
கிராம நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை மேற்கோள்காட்டி, கிராம நத்தம் நிலங்களில் நீண்டகாலமாக குடியிருந்தால், அந்த நிலத்தை அரசு நிலமாகவோ; ஆக்கிரமிப்பாகவோ கருத முடியாது என்றும், அந்த நிலங்களை மறு வகைப்படுத்த முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
அதேசமயம், கிராம நத்தம் நிலத்தில் யாரும் குடியிருக்காவிட்டால், அந்த நிலம் அரசுக்கு சொந்தம் என்றும், அந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றலாம் எனவும், இதுசம்பந்தமாக நான்கு வாரங்களில் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

0 Comments