முன்னணி ஐடி நிறுவனமான Accenture சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த பணிக்கு டிகிரி முடித்து முன்அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
தற்போது ஐடி நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும் என்பது பலருக்கும் கனவாக உள்ளது. அந்த வகையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஆக்சென்ச்சர் (Accenture) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங், அனலிட்டிக்ஸ், மொபிலிட்டி, சாப்ட்வேர் டெக்னாலஜி, க்ளோட்ஸ் சர்வீசஸ் உள்பட பிற சேவைகளை வழங்கி வருகிறது. தமிழகத்தில் சென்னையில் ஆக்சென்ச்சர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் ஆக்சென்ச்சர் ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது வெப் டெவலப்பர் நியூ அசோசியேட் (Web Developer New Associate) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். அதோடு சம்பபந்தப்பட்ட பிரிவில் 0 - 1 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் அவர்களுக்கு மார்க்கெட்டி ஆபரேஷன்ஸ் மற்றும் வெப் கன்டென்ட் மேனேஜ்மென்ட் தொடர்பான ஸ்கில் செட் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அதேபோல் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவென்று குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
0 Comments