10வது படித்தாலே செவிலியர் ஆகலாம்.! இலவச பயிற்சியோடு வேலை- தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

Follow Us

10வது படித்தாலே செவிலியர் ஆகலாம்.! இலவச பயிற்சியோடு வேலை- தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

 தமிழக அரசு இலவச உதவி செவிலியர் பயிற்சி வழங்குகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-33 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

                                                                                 


பயிற்சி முடித்தவுடன் வேலைவாய்ப்பு உறுதி.

Free assistant nursing training : வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது. அந்த வகையில் வெளிநாட்டு முதலீடுகள் ஈர்த்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூலம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது. அடுத்தாக சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்காக பயிற்சியும் அளித்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகிப்பது செவிலியர்கள் பணி,

அந்த வகையில் மருத்துவர்கள் இருந்தாலும் செவிலியர்கள் தான் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் செவிலியர் பணிக்கு பல லட்சம் சம்பளத்தில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10வது படித்திருப்பவர்களுக்கு உதவி செவிலியர் பயிற்சியானது வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், உதவி செவிலியராக பணிபுரிய விருப்பமா? இன்றே பதிவு செய்யுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கப்படும் பயிற்சியில் கலந்து கொள்ள தேவையான தகுதிகள், பயிற்சி காலம், பயிற்சி வழங்கப்படும் இடங்கள், உதவி செவிலியர்களுக்கான பணி வாய்ப்பு தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. இதன் படி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பிக் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,


வழங்கப்படும் பயிற்சிகள்/ தகுதிகள்:


செவிலிய பணி உதவியாளர் (GDA]


தகுதி:


வயது: 18 முதல் 33 வரை உள்ள பழங்குடியின பெண்கள் மட்டும்


கல்வி: 10ம் வகுப்பு தேர்ச்சி


பயிற்சி வழங்குபவர் : Apollo MedSkills


பயிற்சி காலம்: 2 மாதங்கள்


பயிற்சி இடம்: சென்னை

ஊதியத்துடன் வேலை வாய்ப்பு:


அனுபவ அடிப்படையிலான ஊதியம். நிலையான வேலை மற்றும் மருத்துவ துறையில் ஊதிய உயர்வுடன் வளர்ச்சிக்கான வாய்ப்பு.


பயிற்சியின் பயன்கள்:


வேலை உத்தரவாதம்.


இந்த பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு தங்கும் இடம் மற்றும் உணவு இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் திறன் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படுவதோடு உதவி செவிலியர் பயிற்சி கட்டணம் எதுவும் இல்லையெனவும் முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments