Aadhaar Card Update: ஆதாரில் உள்ள தகவல்களை மாற்ற/ திருத்துவதற்கான விதிகள் குறித்த விபரங்கள்

Follow Us

Aadhaar Card Update: ஆதாரில் உள்ள தகவல்களை மாற்ற/ திருத்துவதற்கான விதிகள் குறித்த விபரங்கள்

 Aadhaar Update: அடையாளச் சான்றிதழாக பயன்படுத்தப்படும் ஆவணங்களில் மிகவும் முக்கியமானது ஆதார் அட்டை. வங்கி தொடர்பான பணிகள் முதல், பள்ளி - கல்லூரி சேர்க்கை, வேலையில் சேருதல், முக்கிய பரிவர்த்தனைகள் என பலவிதமான பணிகளுக்கு, நமக்கு தேவைப்படும் முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது.

                                                                                  


இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை இருப்பது கட்டாயமாகும். சிலருக்கு ஆதார் அட்டையில் பதிவான தகவல்களில், பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களில் தவறுகள் இருக்கக் கூடும். எனவே இதனை திருத்த வேண்டிய அவசியம் ஏற்படலாம். அதோடு, வீடு மாறுதல், வேலை மாற்றலாகி புது இடத்திற்கு செல்லுதல் போன்ற பல காரணங்களுக்காக ஆதாரில் தங்கள் முகவரியை மாற்ற வேண்டிய அல்லது புதுப்பிக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம்.


ஆதார் அட்டையில் தவறாக பதிவான, பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை அப்டேட் செய்து திருத்த அல்லது மாற்றுவது தொடர்பான விதிகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்வோம்.

ஆதார் அட்டையில் உள்ள பெயரை எத்தனை முறை திருத்தலாம் அல்லது மாற்றலாம்


சில பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் குடும்பப் பெயரை மாற்றுகிறார்கள் அல்லது வேறு சில காரணங்களுக்காக தனது பெயரை மாற்றிக் கொள்ள சிலர் நினைக்கலாம். இந்நிலையில், ஆதார் அட்டை வழங்கும் Unique Identification Authority of India (UIDAI) விதிகளில், ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் பெயரை (ஆதாரில் பெயர் மாற்றம்) அதிகபட்சம் 2 முறை மாற்றிக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதாவது பெயரை இரண்டு முறை மட்டுமே மாற்ற முடியும்.


ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள வயதை எத்தனை முறை மாற்றலாம்?


உங்கள் பிறந்த தேதியில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், அதையும் சரி செய்து கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு இந்த வாய்ப்பு ஒரு முறை மட்டுமே உள்ளது, அதாவது உங்கள் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே DOB ஐ மாற்ற முடியும்.

ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்கான விதி என்ன?


ஆதார் அட்டையில் உள்ள முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம் இதற்கு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. மின்சாரம்/தண்ணீர்/தொலைபேசி கட்டணம், வாடகை ஒப்பந்தம் போன்ற சரியான ஆதாரங்களை வழங்குவதன் மூலம் உங்கள் முகவரியை ஆன்லைனில் நீங்களே மாற்றிக் கொள்ளலாம். அல்லது ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று தகவல்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.


ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள தவறான பாலின தகவல்களை திருத்துவதற்கான விதிகள்


உங்கள் ஆதாரில் தவறான பாலினத் தகவல்கள் பதிவாகி இருந்தால், உங்கள் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே அதைத் திருத்துவதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்.

ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை எத்தனை முறை மாற்றலாம்?


தற்போது பல இடங்களில் ஆதார் அட்டை தேவைப்படுகிறது, ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் அனுப்பப்படும் OTP பல இடங்களில் தேவைப்படுகிறது. ஆனால் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாற்ற விரும்பினால், இதனை ஆன்லைன் மூலமே மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது. இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். UIDAI இதற்கான வரம்பு எதுவும் நிர்ணயிக்கவில்லை.

Post a Comment

0 Comments