இந்தியாவில் பேங்க் அக்கவுண்ட் (Bank Account) அல்லது நிதி நிறுவனங்களில் அக்கவுண்ட் (Financial Institutions Account) வைத்திருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் ஏப்ரல் 2025ஆம் ஆண்டு முதல் புது விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த விதிகளால் டிஜிட்டல் பேங்கிங் (Digital Banking) மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளில் (Digital Payment Services) மாற்றங்கள் வர இருக்கின்றன. ஆர்பிஐ (RBI) என்று அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (Reserve Bank of India) இந்த விதிகளை விதித்துள்ளது.
கூகுள் பே (Google Pay), போன் பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களை (UPI Apps) பயன்படுத்தினாலும், இன்டர்நெட் பேங்கிங் மூலம் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளை வழங்கும் பேங்குகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அதீத கவனம் செலுத்தி வருகிறது. லோன் அப்ளை செய்வது, தனிநபர் கடன் பெறுவது உள்ளிட்டவை இதில் இருக்கின்றன.
ஆகவே, இதில் புதுப்புது விதிகளை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அமல் செய்து வருகிறது. இப்போது, டொமைன் விதிகளை (Domains Rules) கொண்டு வந்துள்ளது. இந்த விதிகள் எஸ்பிஐ (SBI), எச்டிஎப்சி (HDFC), ஐஓஎபி (IOB), ஆக்சிஸ் (Axis), கனரா (Canara), இந்தியன் பேங்க் (Indian Bank), ஐசிஐசிஐ (ICICI) மற்றும் பிஎன்பி (PNB) போன்ற ஒட்டுமொத்த பேங்குகளுக்கும் பொருந்தக் கூடியது. அதேபோல நகை கடன் வழங்கல், இன்சூரன்ஸ் பிரீமியம், மியூச்சுவல் பண்ட் போன்ற பேங்க் அல்லாமல் நிதி சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் இது பொருந்தக் கூடியதாகும். இந்த விதிகளால் பேங்க் மற்றும் நிதி நிறுவனங்களில் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு சிரமம் ஏதும் கிடையாது. அவற்றின் இன்டர்நெட் டொமைன் (Internet Domain) மட்டுமே மாற்றப்பட இருக்கிறது.
அதாவது, மேற்கண்ட நிறுவனங்கள் தங்களது பெயருக்கு ஏற்ப இன்டர்நெட் டொமைனை பயன்படுத்துகின்றன. இதேபோல போலியாக டொமைனை உருவாக்கி டிஜிட்டல் பேமெண்ட்களில் பணத்தை பறிக்கவும் வாய்ப்புள்ளது. ஆகவே, பேங்குகள் இனிமேல் பேங்க்.இன் (bank.in) டொமைனையும், நிதி நிறுவனங்கள் ஃபின்.இன் (fin.in) டொமைனையும் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த டொமைன்கள் மூலமே அனைத்து டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளை வழங்க வேண்டும் என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் புதிய டொமைன்களை ஏப்ரல் 2025ஆம் ஆண்டுக்குள் அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. ஆகவே, பேங்குகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கட்டாயம் இந்த விதிகளுக்கு உட்பட்டு சேவையை வழங்க இருக்கின்றன. ஏற்கனவே, பிப்ரவரி மாதத்தில் இரண்டு புதிய யுபிஐ விதிகள் (UPI Rules) அமலுக்கு வந்தன. பிப்ரவரி 15ஆம் தேதி முதல் யுபிஐ பரிவர்த்தனை சார்ஜ்பேக் (UPI Transactions Chargeback) விதிகள் அமல் செய்யப்பட்டது. அதற்கு முன்பாக யுபிஐ பரிவர்த்தனை ஐடி (UPI Transactions ID) விதிகள் அமலுக்கு வந்தன. இப்போது, இன்டர்நெட் பேங்கிங் சேவைகளில் புது விதிகள் வந்துள்ளன. யுபிஐ பரிவர்த்தனை சார்ஜ்பேக் விதிகளில் தவறாக எடுக்கப்பட்ட பணமானது, பரிவர்த்தனை கிரெடிட் உறுதிப்படுத்தல் - டிசிசி (Transaction Credit Confirmation - TCC) மற்றும் திரும்பப் பெறும் கோரிக்கைகள் (Raised Return Requests - RET) அடிப்படையில் ஆட்டோமேட்டிக் முறையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் யுபிஐ கஸ்டமர்கள் விரைவாக பணத்தை பெற்று கொள்ளலாம்.
பிப்ரவரி 1ஆம் தேதியில் அமலுக்கு வந்த யுபிஐ பரிவர்த்தனை ஐடி விதிகளை பார்க்கையில். யுபுஐ பரிவர்த்தனை ஐடிகளில் சிறப்பு எழுத்துக்கள் (Special Characters) பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனை ஐடிக்களிலும் எண்கள் அல்லது எழுத்து மட்டும் கொண்ட ஆல்பாநியூமரிக் (Alphanumeric) பயன்படுத்தப்படுகிறது.
.jpg)
0 Comments