ரூ.799 கட்டினால் ரூ.15 லட்சம் கிடைக்கும்.. தபால் அலுவலகத்தில் காப்பீடு.. முக்கிய அறிவிப்பு

Follow Us

ரூ.799 கட்டினால் ரூ.15 லட்சம் கிடைக்கும்.. தபால் அலுவலகத்தில் காப்பீடு.. முக்கிய அறிவிப்பு

 கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட தபால் அலுவலகங்களில் விபத்து காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் 28-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.. ரூ.320-க்கு ரூ.5 லட்சம், ரூ.559-க்கு ரூ.10 லட்சம், ரூ.799-க்கு ரூ.15 லட்சம் என்ற வகைகளில் இந்த திட்டத்தில் இணையலாம்.. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் இத்திட்டத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.


                                                                           



தபால்துறையின் கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "மத்திய அஞ்சல் துறையும், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியும் இணைந்து பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி மிகவும் பயனுள்ள, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள திட்டமான விபத்து காப்பீடு திட்டத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக விபத்து காப்பீடு பதிவு வாரம் நேற்று முதல் தொடங்கி உள்ளது.

நாள்தோறும் வேலைசெய்யும் இடங்களில், வீடுகளில், பயணங்களின்போது என பல்வேறு எதிர்பாராத விபத்துகளால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இதனால் வருவாய் இழப்பு, கடன், மருத்துவ செலவு, குழந்தைகளின் கல்வி, குடும்பத்தின் எதிர்காலம் என அனைத்துமே கேள்விக்குறியாகி விடுகின்றன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு எதிர்பாராத விபத்துகளால் ஏற்படும் செலவுகள், பகுதி ஊனம், நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு அனைத்திற்கும் பயனளிக்கக்கூடிய விபத்து காப்பீடு திட்டத்தை பொதுமக்களுக்கு அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி வழியாக வழங்குகிறது. 

இத்திட்டத்தில் 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள் ஆதார் எண், செல்போன் எண், வாரிசுதாரரின் (நாமினி) விவரங்கள் ஆகும். திட்டத்தின் கட்டண விவரம், ரூ.320-க்கு ரூ.5 லட்சம், ரூ.559-க்கு ரூ.10 லட்சம், ரூ.799-க்கு ரூ.15 லட்சம் என்ற வகைகளில் இந்த திட்டத்தில் இணையலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலங்களிலும் இத்திட்டத்தில் பதிவு செய்துகொள்ளலாம். மாவட்டம் முழுவதிலும் இதற்கான சிறப்பு முகாம்கள் நேற்று முதல் 28-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் இந்த நல்லதொரு வாய்ப்பை பயன்படுத்தி இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தலைமை தபால் அலுவலகம் மற்றும் அனைத்து தபால் அலுவலகங்களையும் அணுகலாம். அல்லது 04652-230493 என்ற எண்ணில் கன்னியாகுமரி கிளை இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கிளை மேலாளரை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு தபால்துறையின் கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments