பிக்சட் டெபாசிட்களில் போடப்படும் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதுதான் பல முதலீட்டாளர்களின் கருத்து. அதற்கேற்ப பழமைவாத முதலீட்டாளர்கள் முதல் புதிதாக முதலீடு செய்ய விரும்புபவர்கள் வரை அனைவருமே பிக்சட் டெபாசிட்களை (FD) தேர்வு செய்கின்றனர். ஏனெனில் இதற்கு பெறப்படும் வருமானமும் நிலையாக இருக்கும். FD-யில் முதலீடு செய்ய நீங்கள் வங்கிகளுக்கு செல்லலாம். இது தவிர தபால் அலுவலகங்களும் FD திட்டங்களை வழங்குகின்றன. போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட்டில் ரூ.6 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு லாபம்? என்பதை பார்ப்போம்.
அனைவருமே ஒரு சிறு தொகையையாவது தங்களுக்கென முதலீடு செய்து வைக்க வேண்டியது முக்கியமாகும். ஏனெனில் நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரிக்கிறது. இதனால் பணத்தின் மதிப்பு குறையத் தொடங்குகிறது. அப்படி இருக்கையில் நமக்கென ஒரு சேமிப்பை வைத்திருப்பது பிற்காலத்தில் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். அதோடு அவசர காலங்களில் கடன் வாங்காமல் இந்த தொகையைப் பயன்படுத்தலாம்.
போஸ்ட் ஆபீஸ் FD: போஸ்ட் ஆபீஸ் FD-கள் பணத்தை முதலீடு செய்வதற்கான சிறந்த வழி. அரசாங்க திட்டம் என்பதால் உங்களுடைய பணத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் வராது. எனவே பணத்தை இழக்க நேரிடுமோ என்ற பயம் உங்களுக்கு வேண்டாம். அதோடு இங்கு வழங்கப்படும் FD-களுக்கு சிறந்த வட்டி விகிதங்களும் வழங்கப்படுகிறது. இங்கு பல்வேறு காலகட்டங்களில் FD முதலீடு செய்யலாம்.
வட்டி விகிதங்கள்: 1 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு 6.9 சதவீத வட்டி விகிதமும், 2 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு 7 சதவீதமும், 3 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு 7.1 சதவீதமும், 5 வருட பிக்ஸட் டெபாசிட்களுக்கு 7.5 சதவீதமும் வட்டி வருமானம் கிடைக்கும்.
போஸ்ட் ஆபீஸ் FD-யில் ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்?: ஒரு முதலீட்டாளர் போஸ்ட் ஆபீஸ் FD-யில் ரூ.6 லட்சம் முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். FD என்றாலே ஒரே முறையாக மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு ஏற்ப 6 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டு காலகட்டத்தில் 7.5 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.2,69,969 வட்டி வருமானம் பெற முடியும். அசலும் வட்டியும் சேர்த்து ரூ.8,69,969 பெற்றுக் கொள்ளலாம்.
மேலே கூறப்பட்டுள்ள கணக்கீடு 6 லட்சத்திற்கானது. இதே தொகையை நீங்களும் முதலீடு செய்ய வேண்டும் என்றில்லை. உங்களுக்கு ஏற்ற தொகையை முதலீடு செய்யலாம். அதற்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை ஆன்லைன் கால்குலேட்டர்களைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
போஸ்ட் ஆபீஸ் ஆன்லைன் கால்குலேட்டர் என்று சர்ச் செய்தால் போதும். அதில் வரும் ரிசல்ட்களில் நீங்கள் எவ்வளவு தொகையை போஸ்ட் ஆபீஸ் FD முதலீடு செய்ய இருக்கிறீர்கள், எந்த காலகட்டத்தை தேர்வு செய்கிறீர்கள் என்பதை வழங்கினால் போதும் முதிர்வு காலத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். இதன் நன்மை என்னவென்றால் தகவல் அறிந்து முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம். நீங்கள் பெறப்போகும் வருமானத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு முதலீடு செய்யலாம்.
.jpg)
0 Comments