RBI அறிமுகம் செய்த புதிய ‘RBIDATA’ மொபைல் ஆப்.. இதுல என்னவெல்லாம் இருக்கும் தெரியுமா..?

Follow Us

RBI அறிமுகம் செய்த புதிய ‘RBIDATA’ மொபைல் ஆப்.. இதுல என்னவெல்லாம் இருக்கும் தெரியுமா..?

 இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவின் மத்திய வங்கியாகும். மேலும் இந்திய வங்கி முறை மற்றும் இந்திய நாணயத்தை ஒழுங்குபடுத்துவதற்கு பொறுப்பான ஒழுங்குமுறை அமைப்பாகும். இது நாட்டின் முக்கிய கட்டண முறைகளையும் நிர்வகிக்கிறது மற்றும் அதன் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக செயல்படுகிறது.இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பிப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை அன்று,இந்தியப் பொருளாதாரம் தொடர்பான பெரிய பொருளாதார மற்றும் நிதி புள்ளிவிவரங்கள் குறித்த தரவை வழங்கும் 'RBIDATA' என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.





இந்த செயலியின் முக்கிய நோக்கம் என்னவென்றால், பயனர்களுக்கு பொருளாதாரத் தரவை எளிதாக தெரிந்துகொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகும். இதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் நிலைமை குறித்த விரிவான தகவல்களை அளவீட்டு விளக்கப்படங்கள் மற்றும் வரைபடங்களின் மூலம் புரிந்துகொள்ளலாம்.

RBI Data செயலி 11,000 க்கும் மேற்பட்ட பொருளாதார மற்றும் நிதி புள்ளிவிவர தொகுப்புகளுக்கான அணுகலை வழங்குகிறது.இது இந்திய பொருளாதாரத்தின் நிலைக் குறித்து பயனர்களுக்கு விரிவான கண்ணோட்டத்தை வழங்கும்.பயனர்கள் நேர்தொடர் (time series) தரவை, வரைபடங்கள் மற்றும் விளக்கப்படங்கள் மூலம் பார்வையிடலாம், இது பெரிய அளவிலான தவுகளை எளிதாக புரிந்துக் கொள்ள உதவும்.தரவை பதிவிறக்கம் செய்யும் வசதி பயனர்கள் தங்கள் சொந்த பகுப்பாய்விற்காக தேவையான பொருளாதாரத் தரவை பதிவிறக்கம் செய்யலாம்,இது ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொருளாதார ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த செயலி, தரவு மூலங்கள், அளவீட்டு அலகுகள், அதிர்வெண் மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள் போன்ற கூடுதல் விவரங்களை வழங்கும். இது பயனர்களுக்கு வரைபடங்கள் மற்றும் விளக்கப்படங்களை முழுமையாக புரிந்துகொள்ள உதவுகிறது.இந்த செயலியில் "தேடல்" விருப்பமும் உள்ளது, இதன் மூலம் பயனர்கள் பிரிவுகள் அல்லது வெளியீடுகளுக்குச் செல்லாமல், முகப்புத் திரையில் இருந்து நேரடியாக தேவையான தரவை தேடலாம்.RBIDATA செயலி பயனர்களுக்கு "வங்கி விற்பனை நிலையம்" என்ற விருப்பத்தையும் வழங்குகிறது. இதன் மூலம், பயனர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து 20 கி.மீ. சுற்றளவில் உள்ள வங்கிகளை கண்டறிய முடியும்.

இந்த செயலி, SAARC நாடுகளைப் பற்றிய பொருளாதாரத் தரவுகளையும் பயனர்கள் அணுக "SAARC நிதி" விருப்பத்தினை வழங்குகிறது.இந்த செயலி RBI-யின் தரவுத்தளமான (DBIE - https//data.rbi.org.in) என்ற போர்ட்டலுக்கு விரைவாக அணுக உதவுகிறது. இதன்மூலம் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பொருளாதாரத் தரவை எளிதாக அணுகலாம்.

இந்த செயலி ஆண்ட்ராய்டு (பதிப்பு 12 மற்றும் அதற்கு மேற்பட்டவை) மற்றும் ஆப்பிள் iOS பயனர்களுக்கு கிடைக்கும். இது பயனர் நட்பு இடைமுகத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதால், நேவிகேஷன் (Navigation) எளிதாக இருக்கும்.RBI அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, இந்த செயலியின் செயல்பாடுகளை மேம்படுத்த,பயனர்களிடமிருந்து கருத்துகளை சேகரிக்கும் திட்டம் உள்ளது. இது செயலியின் மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும்.

 RBIDATA செயலி இந்திய பொருளாதாரத் தரவை விரைவாக மற்றும் பயனர் நட்பு வடிவத்தில் வழங்கும் ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.RBI இந்த செயலியின் செயல்பாட்டை தொடர்ந்து மேம்படுத்த, பயனர்களிடமிருந்து கருத்துகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளது.மொத்தத்தில், RBIDATA செயலி ஒரு முக்கிய பொருளாதார தகவல் மேம்பாட்டு முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை.


Post a Comment

0 Comments