கணினி பட்டா.. தூத்துக்குடி மக்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் குட்நியூஸ்.. ஞாயிறை மிஸ் பண்ணிடாதீங்க

Follow Us

கணினி பட்டா.. தூத்துக்குடி மக்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் குட்நியூஸ்.. ஞாயிறை மிஸ் பண்ணிடாதீங்க

 தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கிரையபத்திரம் வைத்திருந்து குடியிருந்து வரும் குடியிருப்புதாரர்கள் மற்றும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட பட்டா வைத்திருக்கும் குடியிருப்புதாரர்கள், கணினி பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வரும் பிப்ரவரி 9ம் தேதி நடைபெற உள்தாகவும், இந்த முகாமில் கணினி பட்டா கோரி விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்





கணினி பட்டா என்பது அனைத்துக் கிராமப் புறச் சொத்துக்களுக்கும் கணினி மூலம் பட்டா வழங்கப்படுவதாகும். அதில் தாசில்தார், துணை தாசில்தார், அல்லது மண்டலத் துணை தாசில்தார் கையெழுத்து இடம் பெறுகிறது. நிலத்தின் உரிமை மற்றும் அளவு குறித்த விவரங்களை கணினி மூலம் பதிவு செய்து வழங்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, நத்தம் நிலம் அல்லாத இடங்களுக்கு மட்டுமே கணினி பட்டா வழங்கப்படுகிறது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கிறது.

இப்படி வழங்கப்படும் கணினி பட்டாவில் கிராமம், தாலுகா கணக்கெடுப்பு எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் உட்பிரிவு எண்கள் நன்செய் நிலம், புன்செய் நிலம் அளவு மற்றும் பிற நில அளவுகளும் அட்டவணையில் குறிப்பிட்டிருக்கும். பட்டாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து கணினி பட்டா பெற முடியும். அதேநேரம் கிரைய பத்திரம் வைத்திருந்து குடியிருந்து வரும் பலர் கணினி பட்டா வாங்காமல் இருக்கிறார்கள். இதுவரை கணினி பட்டா பெறாத குடியிருப்புதாரர்கள் கணினி பட்டா பெற அடிக்கடி அரசு முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடியில் நடத்தப்பட உள்ளது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கிரையபத்திரம் வைத்திருந்து குடியிருந்து வரும் குடியிருப்புதாரர்கள் மற்றும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட பட்டா வைத்திருக்கும் குடியிருப்புதாரர்கள், கணினி பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் கணினி பட்டா கோரி விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம். எனவே கணினி பட்டா பெறுவதற்கான மனுக்கள் வழங்குவோர் கிரையப் பத்திர நகல் அல்லது அரசு வழங்கிய பட்டா மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் தங்கள் மனுக்களை அளிக்க வேண்டும்" இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments