ரிசர்வ் வங்கி நாணய கொள்கை குழு (MPC) வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25% ஆக நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் வீட்டுக்கடன் வாங்கியோருக்கு பெரும் நன்மை கிடைக்கப்போகிறது. ரெப்போ விகிதம் குறைப்பிற்கும், வீட்டுக் கடனுக்கும் என்ன தொடர்பு..? இதன் மூலம் ஒருவர் எப்படிப் பலனடைய முடியும்..?
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டதால், ப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் வழங்கப்படும் வீட்டுக்கடன்களுக்கான மாத தவணை (EMI) குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தற்போது வீட்டுக்கடன் பெற்றுள்ளவர்கள் மாதம் மாதம் செலுத்தும் ஈஎம்ஐ குறையும், இதேபோல் புதிய வீடுகள் வாங்குவதற்கும் ஊக்கம் அளிக்கும்
இதேபோல் வங்கிகள் இந்த வட்டி விகித குறைப்பின் நன்மையை முழுமையாக வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. வங்கிகளின் முடிவின் அடிப்படையில் கடனுக்கான வட்டி விகிதம் குறையும். எனவே வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் வாங்கியவர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ரெப்போ விகிதம் என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து வணிக வங்கிகள் கடன் வாங்குவதற்கான வட்டி விகிதமாகும். இந்த விகிதம் குறைவது வங்கிகளின் கடன் வழங்கும் விகிதத்தையும் குறைக்கும். இதனால் வீட்டுக்கடன் வட்டி விகிதமும் குறையும். வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடனுக்குச் செலுத்தும் 9-11 சதவீத வட்டி விகிதத்தில் ரெப்போ விகிதம் (6.25%) பெரும் பகுதி வகிக்கிறது. இந்த வட்டி விகிதக் குறைப்பு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இந்த வட்டி விகிதக் குறைப்பால், வீட்டுக்கடன் வாங்கியோர் மாத தவணையில் சிறிய அளவிலான நிதி ஆதாரத்தை மாத செலவுக்காகப் பெறுவதுடன், வீட்டு விலை, ரியல் எஸ்டேட் முதலீட்டையும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வீட்டு விலை உயர்வால் ஏற்படும் பாதிப்பு குறைந்து, வீடு வாங்கும் கனவு பலருக்கும் நிறைவேறும்
0 Comments