இனி யாரு வேணா ChatGPT Search யூஸ் பண்ணலாம்.. Sign in செய்ய அவசியம் இல்லை!

Follow Us

இனி யாரு வேணா ChatGPT Search யூஸ் பண்ணலாம்.. Sign in செய்ய அவசியம் இல்லை!

 சாட்ஜிபிடி (ChatGPT) கொண்டு, கூகுள் (Google) நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன கூகுள் ஜெமினையின் (Gemini) கதையை கிட்டத்தட்ட "முடிச்சு விட்ட" கையோடு, ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனமானது கூகுள் சேர்ச்சிற்கு (Google Search) எதிராகவும் ஒரு தரமான வேலையை பார்த்து உள்ளது.




இனிமேல் சாட்ஜிபிடி சேர்ச் (ChatGPT Search) அம்சத்தை அணுக சைன் இன் (Sign in) செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று ஓப்பன்ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது இனிமேல் chatgpt.com இல் சாட்ஜிபிடி சேர்ச்சை, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சைன்இன் செய்யாமல் பயன்படுத்தலாம்

முன்னதாக இந்த அம்சத்தை அணுக, பயனர்கள் chatgpt.com வலைத்தளத்திற்குள் சென்று, ​​அவர்களுடைய கூகுள் (Google) அல்லது ஆப்பிள் (Apple) அல்லது மைக்ரோசாப்ட் (Microsoft) அக்கவுண்ட் மூலம் ரிஜிஸ்டர் செய்ய வேண்டியிருந்தது. தற்போது இந்த அம்சத்தை பயன்படுத்துவதற்கான செயல்பாட்டில் இருந்து சைன்இன் ப்ராசஸ் நீக்கப்பட்டுள்ளது இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ஓப்பன்ஏஐ வெளியிட்ட அறிவிப்பில், நிறுவனத்தின் சிஇஓ-வான சாம் ஆல்ட்மேன் "மீண்டும் சேர்ச்சை சிறந்ததாக்குங்கள்" என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நினைவூட்டும் வண்ணம் ஓப்பன்ஏஐ நிறுவனமானது கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சாட்ஜிபிடி சேர்ச் அம்சத்தை அறிமுகப்படுத்தியது

இருப்பினும், இது பணம் செலுத்தும் பயனர்களுக்கு மட்டுமே என்று வரையறுக்கப்பட்டது. ஆனால் இப்போது பணம் ​​செலுத்தப்படாத வெர்ஷனை பயன்படுத்துபவர்கள் உட்பட அனைவருக்கும் இந்த அம்சம் அணுக கிடைக்கிறது. வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் ஆகிய இரண்டிலுமே சேர்ச் அம்சம் அணுக கிடைக்கிறது. சாட்ஜிபிடி சேர்ச் அம்சம் முதலில் சேர்ச்ஜிபிடி (SearchGPT) என்கிற பெயரின் கீழ் சோதிக்கப்பட்டது. பின்னர் நவம்பர் 2024 இல் சேர்ச் அம்சமாக அறிமுகமானது.

ஒப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் இந்த நடவடிக்கை கூகுள் சேர்ச்சிற்கு (Google Search) பெரிய தலை வலியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். சேர்ச் அட்வெர்டைசிங் கடந்த 2 தசாப்தங்களாக ராஜாவாக இருக்கும் கூகுள் சேர்ச்சை, இது ஒரு வழி செய்துவிடும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். ஏனென்றால் ஏனென்றால் சாட்ஜிபிடி சேர்ச் ஆனது ரியல்டைம் வெப் சேர்ச் மற்றும் நியூஸ் & டேட்டா வழங்குநர்களுடனான கூட்டாண்மையின் கீழ் ஒவ்வொரு நிமிடங்களுக்குமான நியூஸ், வெதர், ஸ்டாக் கோட்ஸ், ஸ்போர்ட்ஸ் ஸ்கோர் மற்றும் பலவற்றை வழங்கும் திறனை கொண்டுள்ளது. மேலும் இந்த சாட்ஜிபிடி சேர்ச் ஆனது, அதன் மேம்பட்ட கான்வெர்சேஷனல் ஏஐ திறன்களுடன் வேகமான, துல்லியமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேர்ச் ரிஸல்ட்களையும் வழங்குகிறது. சாட்ஜிபிடி சேர்ச்சிடம் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இது எளிமையான லிங்க்களுக்கு பதிலாக நுணுக்கமான பதில்களை வழங்குவதால், இது பயனர் ஈடுபாடுட்டை அதிகரிக்கும். இதன் மூலம் பிராண்டுகளுக்கான விளம்பர தொடர்பும் அதிகரிக்கும். மேலும் சாட்ஜிபிடி சேர்ச் வழங்கும் உரையாடல் மாதிரியான ரிசல்ட்ளுக்குள், தத்தம் விளம்பரங்களை வைக்க பிராண்டுகளுக்கு கூடுதல் கட்டுப்பாடும் வழங்கப்படும். இதன் மூலம் சேர்ச் அட்வெர்டைஸ்மென்ட் ஆர்ஓஐ மறுவரையறை செய்யப்படும் வாய்ப்புகளும் உள்ளது.

சமீபத்தில் தான் ஓப்பன்ஏஐ நிறுவனமானது அதன் நெக்ஸ்ட்-ஜென் ஏஐ ஏஜென்ட் (Next Gen AI Agent) ஆன டீப் ரிசர்ச்சை (Deep Research) அறிமுகம் செய்தது. இந்த புதிய ஏஐ ஏஜென்ட் ஆனது ஒப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்பாட் ஆன சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்தி விரிவான ஆராய்ச்சிகளை செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டீப் ரிசர்ச் ஏஐ ஏஜென்ட் ஆனது ஓப்பன்ஏஐ ஓ3 (OpenAI o3) மூலம் இயக்கப்படுகிறது. ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் கூற்றுப்படி, இது நிதி, அறிவியல், கொள்கை & பொறியியல் போன்ற துறைகளில் இன்டென்சிவ் நாலேஜ் வொர்க்களை செய்பவர்களுக்காக கட்டமைக்கப்பட்டுள்ளது. இது முழுமையான மற்றும் நம்பகமான ஆராய்ச்சி தேகளை பூர்த்தி செய்யும். சந்தேகத்திற்கு இடமின்றி இது ஆராய்ச்சி நோக்கங்களை கொண்டவர்களின் பல நேரங்களை சேமிக்கும்

Post a Comment

0 Comments