தங்கத்தை அடகு வைக்க போறீங்களா.. முதல்ல இதை நோட் பண்ணுங்க.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வார்னிங்

Follow Us

தங்கத்தை அடகு வைக்க போறீங்களா.. முதல்ல இதை நோட் பண்ணுங்க.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வார்னிங்

 சென்னை: தங்கத்தை அடகு வைத்தவர்.. அதை திருப்பி மீட்காத பட்சத்தில் ஏலம் விடும்போது முறையாக ஆர்பிஐ விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டு உள்ளார்.

வங்கிகள் ஏலம் விடும்போது தங்கத்தை முறையாக ஏலம் விட வேண்டும். வங்கிகள் பொதுவாக ஆர்பிஐ விதிகளை பின்பற்றியே தங்கத்தை ஏலம் விடும். ஆனால் சில அடகு கடைகள் அப்படி செய்வது இல்லை.




வங்கி அல்லாத அடகு நிறுவனங்கள் சில விதிகளை பின்பற்றுவது இல்லை. அவைகள் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றாமல் தங்க நகைகளை ஏலம் விடுகின்றன. அடகு நிறுவனங்கள் இப்படி செய்வது தெரிந்தால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்து உள்ளார். மக்களவையில் கேள்வி நேரத்தின் போது,​​வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் Scheduled Commercial Banks (SCBs) ஆகியவை ஒரே மாதிரியான விதிகளால் வழிநடத்தப்படுகின்றன. இவை ஆர்பிஐ கீழே வரவில்லை என்றாலும் ஏலம் விடுவதில் முறையாக ஆர்பிஐ விதிகளை கடைபிடிக்க வேண்டும். கடன் வாங்கியவர் தங்கக் கடனைச் செலுத்தத் தவறினால், NBFCகள் மற்றும் வங்கிகளால் தங்கத்தை ஏலம் விடுவதற்கு என்று முக்கியமான விதிகள், செயல்முறைகள் உள்ளன. இந்த செயல்முறைகளை NBFCகள் மற்றும் வங்கிகள் பின்பற்ற வேண்டும். இந்த செயல்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.

பொதுவாக தங்கத்தை ஏலம் விடுவதற்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். பல முறை நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நகை கடன் வாங்கியவர் திருப்பிச் செலுத்த வரவில்லை என்றால், வங்கி அல்லது NBFC ஏலத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் அதை முறையாக வாடிக்கையாளரிடம் தெரிவிக்க வேண்டும். இந்த செயல்முறைகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தங்கத்தின் விலை: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு 2024-25 இன் படி, 2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை குறையும், அதே நேரத்தில் வெள்ளி விலை உயரக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் வெளியான அறிக்கையில் தங்கம் விலை குறையும், வெள்ளி விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரும்புத் தாது, துத்தநாகத்தின் விலை குறைவதால் உலோகங்கள் மற்றும் கனிமங்களின் விலைகள் குறையும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. இப்போது நிலவும் பணவீக்கம் காரணமாக தங்கத்தின் விலை குறையும். இப்போது தற்காலிகமாக தங்கத்தின் விலை அதிகரித்தாலும் வரும் காலங்களில் தங்கத்தின் விலை குறையும் என்று பொருளாதார ஆய்வு 2024-25ல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக பொருட்களின் விலை 5.1 சதவிகிதத்தில் இருந்து 2026ல் 1.7 சதவிகிதமாக குறையும். இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறையும்.. அதில் தங்கத்தின் விலையும் குறையும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெள்ளியின் விலை உயரும்: சர்வதேச அளவில் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இனி எதிர்காலத்தில் தங்கத்திற்கு இணையாக வெள்ளியின் மதிப்பு மாறினால் கூட வியக்க வேண்டியது இல்லை. இனி வரும் காலங்களில் தொடர்ந்து வெள்ளியின் மதிப்பு உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த 12 வருடங்களில் இல்லாத புதிய விலை உயர்வை வெள்ளி அடைந்து உள்ளது. சென்னை - ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 7,555 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கம் விலை ₹ 8,242 (1 கிராம்) ஆகவும் உள்ளது. வெள்ளியின் விலை ரூ.100 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,100-க்கு விற்பனையானது. 22 காரட் தங்கத்தின் விலையும் ரூ.10 உயர்ந்து, 10 கிராமிற்கு ரூ.72,990க்கு விற்பனையானது. கடந்த 12 வருடங்களில் இல்லாத புதிய விலை உயர்வை வெள்ளி அடைந்து உள்ளது. இந்தியாவில் தங்கம், வெள்ளி வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெள்ளி தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


Post a Comment

0 Comments