சென்னை: பிறப்பு சான்றிதழில் பெற்றோரின் இனிஷியல் இல்லை என்றால் மீண்டும் பிறப்பு சான்றிதழில் இனிஷியல் போட்டு வந்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு ஆதார் கார்டு எடுக்க முடியும். தாய், தந்தை இருவருக்கும் ஆதார் கார்டில் இனிஷியல் இருக்கும்... ஆனால் இனிஷியல் இல்லாமல் பிறப்பு சான்றிதழ் வாங்கியிருப்பார். அப்படி நடந்திருந்தால் மீண்டும் இனிஷியல் போட்டு பிறப்பு சான்றிதழ் வாங்கினால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு ஆதார் கார்டு எடுக்க முடியும்.. குழந்தைகளுக்கு ஐந்து வயது முடிந்து ஆதார் பயோமெட்ரிக் வைத்து எடுக்க போகும் பெற்றோர்கள் இதை பாருங்கள்..
இன்றைக்கு ஆதார் கார்டு வாங்குவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.. ஆனால் ஆதார் இல்லை என்றால் நீங்கள் இந்தியாவில் எந்த ஒரு சேவையையும எளிதாக பெற்றுவிட முடியாது.. பள்ளியில் சேர்ப்பது தொடங்கி, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு, பான் கார்டு, பாஸ்போர்ட் என எல்லாவற்றுக்கும் ஆதார் கார்டு வேண்டும். பிறப்பு சான்றிதழ் வாங்கியவர்களால் மட்டுமே ஆதார் கார்டு வாங்க முடியும். அதாவது இந்தியாவில் இந்த மாநிலத்தில், இந்த மாவட்டத்தில், இந்த மருத்துவமனையில் பிறந்தார் என்று அங்குள்ள அரசு அதிகாரி சான்றளிக்க வேண்டும். அந்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே ஆதார் கார்டு வாங்க முடியும்.
ஆதார் கார்டை பொறுத்தவரை பிறந்து ஐந்து வயத்திற்குள் என்றால் அருகில் உள்ள அரசு இசேவை மையங்களில் பயோ மெட்ரிக் இல்லாமல் எடுத்துவிடலாம். அதன்பிறகு ஐந்து வயது கடந்த பின்னர் பயோமெட்ரிக் வைத்து அப்டேட் செய்து கொள்ளலாம். இது எளிது.. ஆனால் ஐந்து வயது முடிந்த பின் ஆதார் கார்டு எடுப்பது என்பது சற்று சவாலானது. ஏனெனில் ஏதாவது முக்கியமான பெரிய தபால் நிலையத்தில் மட்டுமே ஆதார் கார்டு எடுக்க முடியும். விரல்விட்டு எண்ணக்கூடிய இடங்களில் மட்டுமே ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். அங்கும் 40 டோக்கன் தான் தருவார்கள். காலையில் 7 மணி முதல் 9 மணி வரை அதற்கு லைனில் நிற்க வேண்டியதிருக்கும். சென்னை மற்றும் மதுரையில் ஆதார் கேந்திரா அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் ஆதார் எடுக்கலாம். ஆனால் அதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்த பதிவை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொண்டு, அத்துடன் செல்ல வேண்டும். ஆதார் எடுக்க போகும் முன்பு உங்கள் மனைவியின் பெயரும், உங்கள் பெயரும் பிறப்பு சான்றிதழில் எப்படி உள்ளது. ஆதாரில் எப்படி உள்ளது என்பதை பாருங்கள்.
ஆதாரில் இனிஷியல் இருந்து, பிறப்பு சான்றிதழில் இனிஷியல் இல்லை என்றால் உங்கள் குழந்தைக்கு ஆதார் எடுக்க மாட்டார்கள்.. பிறப்பு சான்றிதழில் உங்கள் இருவரின் பெயருக்கு பின்னர் இனிஷியல் சேர்த்து வருமாறு கூறுவார்கள். அதேபோல் பிறப்பு சான்றிதழில் உங்கள் பெயருக்கு பின்னால் உங்களின் தந்தை பெயர் இருந்து, உங்கள் ஆதாரில் இல்லை என்றால் அதுவும் சிக்கல் தான். எப்படி பான் கார்டில் உள்ளது போலவே ஆதாரில் இருக்க வேண்டும் என்று முன்பு கூறினார்களோ, அப்படித்தான் ஆதாரில் உள்ளபடி பிறப்பு சான்றிதழில் உங்கள் பெயரை கொடுங்கள்.. இல்லாவிட்டால் ஐந்து வருடம் கழித்து அலைய வேண்டியதிருக்கும். எல்லாம் சரியாக இருக்கிறது என்றால், ஆதார் சேவை மையத்திற்கு உங்களது ஒரிஜினல் ஆதார் கார்டு, உங்கள் குழந்தையின் ஒரிஜினல் பிறப்பு சான்றிதழுடன் நேரில் செல்லுங்கள்.. அப்படி சென்றால் மட்டுமே ஆதார் எடுப்பது எளிதாக இருக்கும்.. இல்லாவிட்டால் தேவையில்லாமல் அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும்.
.jpg)
0 Comments