சென்னை: செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் மாதந்தோறும் 10-ஆம் தேதிக்கு பிறகு பணம் செலுத்தினால் வட்டி விகிதம் குறைகிறதா? இந்த திட்டத்தில் வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து சமூகவலைதளத்தில் வெங்கடராமன் ராமசுப்பிரமணியன் கூறியிருப்பதாவது: செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் மாதா மாதம் 10-ஆம் தேதிக்குள் பணம் செலுத்தினால் தான் வட்டி விகிதம் அந்தத் திட்ட முறையில் கிடைக்குமா? தவறித் தவறி செலுத்தினால் கிடைக்காதா? செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் எவ்வாறு வட்டி கணக்கிடப்படுகிறது ?
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில், மாதா மாதம் 10ம் தேதிக்குள் செலுத்தினால், அந்த மாதத்திற்கான வட்டி கணக்கிடப்படும்போது, அது கணக்கில் கொள்ளப்படும். இல்லையென்றால், கவலைக் கொள்ளத் தேவையில்லை. அது அடுத்த மாதம் வட்டி கணக்கிடப்படும் போது, கணக்கில் கொள்ளப்படும். செல்வமகள் சேமிப்புத் திட்டமானது, வருடா வருடம் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி, அடுத்த வருடம் மார்ச் 31 வரையில் செய்த முதலீடானது அந்த நிதியாண்டிற்கு கணக்கில் கொள்ளப்படுகிறது. அந்த நிதியாண்டில் அதிகபட்சமாக, நீங்கள் 1,50,000 வரையில் முதலீடு செய்யலாம். வருடாந்திர வட்டியானது 8.4% என்று வைத்துக் கொண்டால், மாதாந்திர வட்டி 0.7% என்று வரும். இந்த வட்டியானது, அந்த மாதத்தில், 1ம் தேதி முதல் 10ம் தேதிக்குள் செய்த முதலீடானது, அந்த மாத வட்டிக்கு கணக்கில் கொள்ளப்படும். இல்லையேல் அடுத்த மாதம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
10ம் தேதிக்குள் மாதாந்திர முதலீடும், 10ம் தேதி தாண்டி மாதாந்திர முதலீடும்; உதாரணமாக, ஒருவர் மாதா மாதம் 12,500 ரூபாய் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில், 8.4% வட்டி விகிதத்தில், 10ம் தேதிக்குள் முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு வட்டி கணக்கிடப்படும் போது, மாதாமாதம் அந்த 12,500 ரூபாய் கணக்கில் கொள்ளப்படும். 10ம் தேதிக்குள் மாதாந்திர முதலீடு மாதம் முதலீடு மாதாந்திர வட்டி வட்டி மெச்சூரிட்டி பணம் 1 12500 0.7 88 12588 2 12500 0.7 176 25263 3 12500 0.7 264 38027 4 12500 0.7 354 50881 5 12500 0.7 444 63825 6 12500 0.7 534 76859 7 12500 0.7 626 89985 8 12500 0.7 717 103202 9 12500 0.7 810 116512 10 12500 0.7 903 129915 11 12500 0.7 997 143412 12 12500 0.7 1091 157003 வருடக் கடைசியில் பணம் = ரூபாய் 1,57,003
10ம் தேதி தாண்டி மாதாந்திர முதலீடு இதற்கு மாறாக, 10ம் தேதிக்கு பிறகு, மாதா மாதம் 12,500 முதலீடு செய்தால், அவரது முதலீடானது அடுத்த மாதம் மட்டுமே கணக்கில் கொள்ளப் படும். எனவே, குறைந்த பணமே வட்டிக்கு கணக்கிடப்படும். மாதம் முதலீடு மாதாந்திர வட்டி வட்டி மெச்சூரிட்டி பணம் 1 12500 0.7 0 12500 2 12500 0.7 88 25088 3 12500 0.7 176 37763 4 12500 0.7 264 50527 5 12500 0.7 354 63381 6 12500 0.7 444 76325 7 12500 0.7 534 89359 8 12500 0.7 626 102485 9 12500 0.7 717 115702 10 12500 0.7 810 129012 11 12500 0.7 903 142415 12 12500 0.7 997 155912 வருடக் கடைசியில் பணம் = ரூபாய் 1,55,912 எனவே, அதே தொகையை மாதா மாதம் முதலீடு செய்தால் கூட, கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் வட்டியை இழக்கிறார். மேலும், எதிர்காலத்தில் வளரும் தொகையானதும் குறைந்து விடும். ஏனென்றால், கூட்டு வட்டியில், வட்டி சேர சேர, அசலும் கூடுகிறது. 15 வருடங்களுக்குப் பிறகு வளர்ந்த பணத்தில் வித்தியாசம்; 10 ம் தேதிக்கு முன்னர் மாதாந்திர முதலீடு, 15 வருடங்களில், வளர்ந்த பணம் = ரூபாய் 45,13,482
10ம் தேதிக்கு பின்னர் மாதாந்திர முதலீடு,15 வருடங்களில், வளர்ந்த பணம் = ரூபாய் 44, 82,107 10ம் தேதிக்கு முன்னரே மாதாந்திர முதலீடு காரணமாக, கிட்டத்தட்ட 31 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைக்கிறது. எனவே, 10ம் தேதிக்கு முன்பு முதலீடு செய்வது நலம். வருடா வருடம் ஆரம்பத்திலேயே முதலீடு செய்தால், எவ்வளவு வளரும்? இதே உதாரணத்தில், மாதாந்திர முதலீட்டுக்கு மாறாக, வருடா வருடம் ஏப்ரல் 10ம் தேதிக்கு முன்னர், 1.5 லட்சம் முதலீடு செய்தால், வருடம் முழுவதும் அந்தப் பணமானது மாதாந்திர வட்டியில் கணக்கிடப்படும். இவ்வாறு செய்தால், 15 வருடத்தில் வளர்ந்த பணம் = ரூபாய் 50,39,979 எனவே அதே முதலீட்டுத் தொகைக்கு, 15 வருடக் கடைசியில், கூடுதலாக, 5 லட்ச ரூபாய் கிடைக்கிறது. என்னைப் பொறுத்தவரை, வருடா வருடம் ஆரம்பத்திலேயே 1.5 லட்சம் முதலீடு செய்ய முடிந்தால், கூட்டு வட்டியின் பயனை முழுவதுமாக அடையலாம். அவ்வாறு மொத்தமாக முதலீடு செய்ய முடியாத பட்சத்தில், மாதாந்திர முதலீடு 10ம் தேதிக்கு முன்பு செய்வது நலம். அவ்வாறு முடியாத பட்சத்தில், 10ம் தேதிக்குப் பிறகு செய்யலாம். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

.jpg)
0 Comments